Saturday, April 9, 2016

பெண்மணிகள் பற்றி நாராயண ரிஷி நாரதருக்கு விளக்கியது





நாராயண ரிஷி நாரதருக்கு ஐந்து அடிப்படை பிரகிருதி பற்றி விளக்கினார். பிர என்றால் மிகச்சிறந்தது. கிருதி என்றால் உற்பத்தி. எனவே பிரகிருதி என்றால் மிகச்சிறந்த உற்பத்தி என்று பொருள்படும். உற்பத்தியில் தலையாயது பெண் தெய்வங்கள். அவர்களிலும் குறிப்பாக துர்கை, ராதை, லக்ஷ்மி, சரசுவதி, காயத்ரி  மிக முக்கிய வடிவங்கள். மற்ற தேவதைகள் இவர்கள் மூலம் உற்பத்தியாகி இவர்களுடைய அம்சங்களுடன் விளங்குபவை. அவை புனித கங்கை, புனித துளசி, நாகதேவதை மானசை, பிறந்த சிசுக்களுக்கான தேவதை ஷஷ்தி, தேவி மங்களச்சண்டி, காளி வசுந்தரா (பூமி). அடிப்படை பிரகிருதியிலிருந்தே எல்லாப் பெண்களும் தோன்றினர். எனவே பெண்களைத் துன்புறுத்துவது, அவர்களுக்குத் தீமையிழைப்பது, பிரகிருதி தாய்க்கு செய்யும் கொடுமைகள் என அறிதல் வேண்டும். அவர்களுக்கும் அளிக்கும் மரியாதை பிரகிருதி தேவிக்கு அளிக்கும் மரியாதை ஆகும். சக்திக்கு ராஜசம், தாமசம், சத்துவம் என்னும் மூன்று அடிப்படை குணங்கள் உண்டு. பிரகிருதியின் சத்துவகுணம் கொண்ட பெண்மணிகள் நல்லொழுக்கம் கொண்டவராய், கணவனே கண் கண்ட தெய்வமாய் இருப்பவர்.
பிரகிருதியின் ராஜச குணம் படைத்த பெண்டிர் தன்னலம் கொண்டு, வாழ்க்கையின் இன்பங்கள் துய்ப்பதில் நாட்டம் கொண்டவராய் இருப்பர். தாமச குணம் கொண்ட பெண்கள் கூர்மையான நாக்குடையவராய் சண்டை சச்சரவில் ஈடுபட்டும், நம்பிக்கையற்றவராய், கணவனுக்குத் துரோகம் செய்பவர்களாய் இருப்பர்.

No comments:

Post a Comment