Saturday, April 9, 2016

பிரம புராணம் பகுதி-3



வராகமூர்த்தியின் கூற்றுப்படி நிலத்தைப் பயிரிடுவதற்கு முன்பும், அதில் வீடு கட்டும் முன்பும், புதுமனை புகும் போதும், கிணறு, ஏரி, குளம் அமைக்கும் போதும் பூமி பூஜை செய்யப்படுகிறது. அவ்வமயம் நைவேத்தியம் செய்யக்கூடிய பொருள்கள், முத்துக்கள், ரத்தினங்கள், சங்குகள், விளக்கு, புத்தகம், மலர்கள், துளசி இலை, ஜபமாலை போன்றவை இவற்றை அப்படியே பூமியில் வைக்காமல் ஒரு தட்டில் வைத்து நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு தோன்றிய பூமி () வசுந்தராவுக்கும் பல காரணப் பெயர்கள் ஏற்பட்டன. அவை உர்வி, இஜ்யை, öக்ஷளனி, க்ஷிதி, காசியபி, விசுவாம்பவை, அனந்தை, பிருதிவி என்பவை.
கங்காவதாரம்
பகீரதன் தவத்துக்கு மெச்சி, கிருஷ்ணன் அழைக்க, கங்கை புவியில் அவதரித்தாள். சகர புத்திரர்கள் மோட்சம் பெற உதவினாள். ஒருமுறை கங்கையில்-புனித நீராடினால் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கும். ஒரு புனித நாளில் நீராடினால் பல பிறவிகளில் ஏற்பட்ட பாவங்கள் நீங்கும். மேலும், கங்கை நீரைக் கண்டாலும், தொட்டாலும் பாவம் தொலையும். கங்கை காற்று உடல் நலம் தரும். கங்கையின் பெயர் உச்சரித்தாலே பாவம் அகலும். தெரியாமலே கங்கை நீர் ஸ்பரிசத்தாலும் பாவம் போய்விடும் என்று கிருஷ்ணன் கூறினார். கங்கை பூமியில் இருக்கும் போது லவண சமுத்திரம் கங்கையின் பதி ஆகும். கங்கையைப் பகீரதன் பூமிக்கும் கொண்டு வந்ததால் பாகீரதி எனப்பெயர் பெற்றான். இந்திரலோகத்தின் வழியாகப் பாயும்போது மந்தாகினி என்று பெயர். பாதாளத்தில் பாயும் போது யோகவதி, விஷ்ணுபஷத்தில் தோன்றியதால் விஷ்ணுபதி. =என்றால் போ; கங்க் என்றால் விண்ணும், மண்ணும். விண்ணிலும் மண்ணிலும் ஓடுவதால் கங்கை என்று பெயர் உண்டாயிற்று.
துளசி, சங்கசூடன் வரலாறு
மன்னன் குசத்வஜனின் மனைவி மாதவியின் மகள் பிருந்தா. அழகு நிறைந்த அவள் விஷ்ணுவே தனக்குக் கணவனாக வேண்டும் என்று காட்டில் கடுந்தவம் செய்து வந்தாள். அவள் தவத்தை மெச்சிய பிரம்மன் அவள் முன்தோன்றி இப்பிறவியில் அவள் சங்கசூடன் என்ற அரக்கனையே மணப்பாள் என்றும், அடுத்த பிறவியில் துளசிச் செடியாகி விஷ்ணுவுடன் இணைவாள் என்றும் கூறி மறைந்தார். குசத்வஜனின் மகளான பிருந்தா முற்பிறவி பற்றி நினைவு கூர்ந்தாள். அவள் முற்பிறவியில் கோலோகத்தில் ஒரு கோபிகையாக கிருஷ்ணன் கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்தாள். கிருஷ்ணன் மீது காதல் கொண்ட அவள் ராதையின் மீது பொறாமை கொண்டதால் ராதை அவளைப் பூமியில் பிறக்குமாறு சபித்தாள். பிரம்மா, சந்திரசூடனின் முற்பிறவி பற்றி எடுத்துரைத்தாள். சந்திரசூடன் முற்பிறவியில் கிருஷ்ணனுடைய சேவர்களில் ஒருவனாக சுதாமன் என்ற பெயரில் இருந்தான். அந்த கோபன் பிருந்தா கோபி மீது காதல் கொண்டான். இதனை ராதை தடுத்ததுடன், சந்திரசூடன் ஓர் அரக்கனாகப் பிறக்குமாறும் சாபமிட்டாள். இப்போது உலகில் சந்திரசூடன் ஓர் அரக்கனாகப் பிறந்தாலும், இங்கு பிருந்தாவையே மணக்க விரும்பி பிரம்மனை வேண்டினான். பிருந்தா ராதையின் கோபம் காரணமாக சந்திரசூடனை மணக்கத் தயங்கினாள். எனவே, பிரம்மன் அவளுக்கு ஒரு மந்திரத்தைக் கற்பித்து அதை உச்சரிப்பதன் மூலம் ராதையைத் திருப்திபடுத்தி சந்திரசூடனை மணக்க அவள் அனுமதியைப் பெற்று, அவனை மணந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாள்.
சந்திரசூடன் அரக்கனாதலால் அவன் தேவர்களுக்குத் தொல்லைகள் அளித்து தேவர்களின் உடைமைகளைப் பறித்துக் கொள்ள, அவர்கள் பிரம்மாவிடம் முறையிட, அவர் தேவர்களுடன் கிருஷ்ணனிடம் சென்று சரணடைந்து முறையிட்டனர். அப்போது கிருஷ்ணன் சந்திரசூடனுக்குத் தான் ஒரு øக்ஷ அளித்திருப்பதாகவும், அதனைத் தானே ஒரு பிராமணன் வடிவில் சென்று அவனிடமிருந்து அகற்றிவிடுவதாகவும் கூறி, அவனை அழிக்க சிவபெருமானுக்கு ஒரு சூலமும் அளித்தார். அப்போது பிரம்மா அவனுக்கு, அவன் மனைவி வேறொருவனைக் கணவனாகக் கொண்டு வாழ்ந்தால் மட்டுமே அவனை அழிக்கமுடியும். அவ்வாறு ஏற்படாத வரையில் அவனை யாராலும் அழிக்க முடியாது என்று வரம் அளித்திருப்பதாகக் கூறினார். சந்திரசூடன் ஒரு கிருஷ்ண பக்தன். சிவனுக்கு அவனைக் கொல்ல மனமில்லை. எனவே, அவனுக்கு நல்லுபதேசம் செய்து நல்வழிப்படுத்த முயன்றார். அதனை ஏற்காத அவனுக்கும் தேவர்களுக்கும் போர் ஏற்பட்டது. சந்திரசூடன் கந்தன், காளி, சிவபெருமான் ஆகியோருடன் போர் புரிந்தான்.
போர் சிறிது நேரம் ஓய்ந்திருந்த போது கிருஷ்ணன் ஓர் அந்தணன் வடிவில் சந்திரசூடனிடம் சென்று அவன் கழுத்திலிருந்த øக்ஷயை யாசித்துப் பெற்றுக் கொண்டார். பின்னர் சந்திரசூடன் உருவில் அவன் இல்லம் அடைய பிருந்தா அந்த மாயத்தை அறியாமல் அவருடன் வாழ்ந்தாள். அந்தச் சமயம் பார்த்து சிவன், கிருஷ்ணனால் அளிக்கப்பட்ட சூலத்தால் சந்திரசூடனைக் குத்திக் கொன்றார். பிருந்தா நிகழ்ந்ததை அறிந்த உடன் கிருஷ்ணன் கல்மனமுடையன் என்று கல்வடிவமாகச் சபிக்க சாலக்கிராமம் உருவானது. கிருஷ்ணன் அவளைச் சமாதானப்படுத்தி இப்போது அவள் ஒரு தெய்வ வடிவம் பெற்று வைகுந்தம் அடைவாள் என்று கூறிச் சமாதானப்படுத்தினார். அங்கு அவள் கிருஷ்ணனுடன் இணைவாள் என்றார். பூமியில் அவளுடைய உடல் கண்டகி என்னும் புனித ஆறாகி பாரதத்தில் பாய்கிறது. அவள் கூந்தல் துளசிப்புதராக வளர்ந்தது.
துளசியின் மகிமை
துளசி மிகவும் புண்ணிய செடியாகும். துளசி தீர்த்தத்தில் நீராடினால் சகல புனித தீர்த்தங்களிலும் நீராடின பலன் தரும். ஒரு பிராமணனுக்கு ஒரு துளசிதளம் தானம் செய்தால் ஆயிரக்கணக்கில் கோதானம் செய்த பலன் கிடைக்கும். கையில் துளசியுடன் பொய் சொன்னால் நெடுநாள் நரகம் சித்திக்கும். மரணிக்கும் போது துளசி தீர்த்தம் உட்கொண்டால் நேரே விஷ்ணு லோகத்தை அடைவர். துளசிக்கு பிருந்தை, பிருந்தாவனி, விஷ்வபவானி, விச்வபூஜிதை, புஷ்பமாயை, நந்தினி, கிருஷ்ண ஜீவனி என்று பல பெயர்கள் உண்டு. கார்த்திகை மாத பவுர்ணமியில் துளசி பூஜை மிகவும் சிறந்தது.
சாளக்கிராமம்
துளசியின் சாபப்படி சாளக்கிராமம் கிருஷ்ணனையே குறிக்கும். அதுவும் புனிதமானது, புண்ணியம் தரவல்லது. சாளக்கிராமத்தைப் பூசிப்பவரின் பிரம்மஹத்தி தோஷமும் நிவர்த்தி ஆகும். அநேக புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் சாளக்கிராமம் முக்கி எடுக்கப்பட்ட நீரில் நீராடினால் கிடைக்கும். தொடர்ந்து சாளக்கிராமம் தீர்த்தங்களைப் பருகியவர் நேராக விஷ்ணுலோகம் அடைவர். துளசி மரித்தவுடன் அவள் கூந்தல் கண்டகி நதி ஆயிற்று. அதன் கரையில் நாராயணன் மலையாகி நின்றார். அம்மலையில் வஜ்ரடங்கள் எனப்படும் பூச்சிகள் காணப்படுகின்றன. அவற்றின் பற்கள் வச்சிரம் போல் கூர்மையானவை. அம்மலை மீது காணும் உருண்டை கற்களில் இப்பூச்சிகள் துளைகள் செய்கின்றன. இவையே சாளக்கிராம உருவங்கள். பலவகை சாளக்கிராமம் பற்றி கருடபுராணம் விவரிக்கிறது. சந்திரசூடனைக் கொன்ற பிறகு சிவபிரான் அவனுடைய உடலைச் சமுத்திரத்தில் எறிந்து விட, அந்த எலும்புகளிலிருந்து பலவகை சங்குகள் உற்பத்தி ஆயின. சிவனைத் தவிர மற்ற எல்லா கடவுளர்க்கும் சங்கு தீர்த்த அபிஷேகம் சிறந்தது. சங்கு ஊதப்படும் வீட்டை விட்டு லக்ஷ்மி எப்போதும் பிரியமாட்டாள். சங்கு தோய்ந்த தீர்த்த ஸ்னாநம் அனைத்து புண்ணிய தீர்த்த நீராடலுக்கும் சமம்.
சாவித்திரி விரதம்
சாவித்திரி தேவதை வேதங்களைப் பிறப்பித்தவள். அவள் சூரியனுக்கும் மந்திரங்களுக்கும் தாய் ஆவாள். அவள் பொன்னிறமேனியாள். அழகிய ஆடை, ஆபரணங்கள் அணிந்து புன்சிரிப்புடன் திகழ்வாள். அவளுக்கு ஆசனம், தீர்த்தம், அரிசி, சந்தனம், தூபம் மாலை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். சாவித்திரி விரதம் ஜேஷ்ட (ஆனி) மாதம், திரயோதசி அன்று செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் செய்ய வேண்டும். பதினான்கு வகை பழங்கள் நிவேதனம் செய்ய வேண்டும். அந்தணர்களுக்கு தானம் அளிக்க வேண்டும். மாத்ர நாட்டு மன்னன் அசுவபதிக்கு பராசர முனிவர் இந்த விரத மகிமை பற்றியும், செய்முறைகளைப் பற்றியும் கற்பித்தார். இந்த விரதத்தை மேற்கொண்ட அசுவபதி முன் சாவித்திரி தேவி தோன்றிட, அதன் பலனாக அவன் மனைவி ராணிமாலதிக்கு அத்தேவியே மகளாகப் பிறந்தாள். அப்படிப் பிறந்த சாவித்திரி துயுமதி தேசன் மகன் சத்தியவானை மணந்தாள். மணந்த ஓராண்டுக்குள்ளாகவே ஒரு விபத்து நிகழ்ந்தது. சத்தியவான் சாவித்திரியுடன் காட்டில் விறகும், பழங்களும் சேகரித்து வரச்சென்றான். அங்கு அவன் மரத்திலிருந்து கீழே விழுந்து மடிந்தான்.
பிறகு யமன் சத்தியவான் உயிரை எடுத்துச் செல்ல, சாவித்திரி அவனுடன் வாதாடி வெற்றி பெற்று, சாதுர்யமாக தன் மாமனார், மாமியார்களுக்குக் கண்களின் குருடு நீங்கி பார்வை பெற்றதும், தனக்கு மகன் வேண்டும் என்று யமனிடம் பெற்றதும், வரம் பெற்ற பிறகு யமன், சத்தியவானை உயிருடன் சாவித்திரிக்கு அளித்ததும் பல புராணங்களில் கூறப்பட்டன. இவையே இன்றி சாவித்திரி, யமன் உரையாடலில் யமன் கூறியதாகப் பல செய்திகள் இந்த வைவர்த்த புராணத்தில் காணப்படுகின்றன. யமன் முற்பிறவி கர்மாக்களுக்கு ஏற்ப ஒருவன் பிறப்பும் இறப்பும் ஏற்படுவதைப் பற்றிக் கூறுகிறான். மற்றும் தான வகைகள் அவற்றின் பலன்களைப் பற்றியும் இயமன் கூறினான். பெருமளவில், நிலம், அரிசி பிராமணனுக்கத் தானம் செய்தவர் விஷ்ணுலோகம் அடைவர். வீடு தானம் அளித்தவர் தேவலோகம் அடைவர். வீடு தானம் அளித்தவர் தேவலோகம் அடைவர். கால்நடைகள், செம்பு, பொன் தானம் அளித்தவர் சூரியலோகம் அடைவர். ஒரு பிராமணன் மற்றொரு பிராமணனுக்குத் தன் கன்னிகையை தானம் செய்வித்தால் சந்திரலோகம் அடைவான். அல்லது விஷ்ணுலோகம் சேர்வான். கறவை பசுக்கள், துணிமணிகள், சாலக்கிராமங்கள், குடை, காலணி, தீபம், படுக்கை, குதிரை, யானை, பல்லக்கு போன்ற தானங்களும் சிறந்த பலன்களைத் தரும்.
அடுத்து, யமன் பலவகை விரதங்கள் பற்றி எடுத்துக் கூறுகிறான். சிவராத்திரி அன்று வில்வதளம் கொண்டு சிவனை ஆராதிப்பவர் சிவலோகம் அடைவர். ராமநவமி விரதம் அனுஷ்டித்தவர் விஷ்ணு லோகத்தில் நீடித்து வாழ்வர். கார்த்திகை மாதத்தில் ராசமண்டபம் கட்டி பூசை, பஜனை செய்தால் கோலோகம் கிட்டும். ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர் வைகுண்டலோகம் அடைவர். ஜேஷ்ட (ஆனி) மாதம் சதுர்த்தசி திதியில் சாவித்திரி விரதம் அனுஷ்டிப்பவர்கள் பிரம்மலோகம் பெறுவர். மாக () மாசி மாதத்தில் பஞ்சமி அன்று சரஸ்வதி பூஜை, விரதம் இருந்தால் வைகுண்டலோகம் அடைவர். உலகைச் சுற்றி வந்து எல்லா தீர்த்தங்களிலும் புனித நீராடுபவர் வீடு பேறு பெறுவர். அவர்களுக்கு மறுபிறவி கிடையாது. இவையேயன்றி மிகப்பெரிய யாகங்கள் பற்றியும் யமன் கூறுகிறான். அசுவதேம யாகம் செய்பவர் இந்திரலோகத்தில் பாதி பெற்று இனிது வாழ்வர். ஒரு ராஜசூய யாகம் செய்தவன் அசுவமேதயாகம் செய்த பலனைப் போல் நான்கு மடங்கு பலன் பெறுவான். ஆனால், எல்லாவற்றிலும் சிறந்த விஷ்ணு யஜ்ஞம் செய்தவர், ஆயிரம் ராஜசூய யாகப் பலனைப் பெறுவார்.
யமன் எண்பத்தாறு நரகலோகங்களைப் பற்றிக் கூறுகிறார். அவற்றுள் அக்னி குண்டம், கர குண்டம், தப்தம்ர தப்த பாஷணா, கூர்ம, கோல, சஞ்சனா, கஜ தம்ஷா, அசிபதிர குண்டம், கும்பிபாகம், காலகத்திரம், அந்தகூபம், தூமாந்தம், விஷனம், திபசூர்ணம், தாலனம் என்று சிலவற்றைப் பற்றிக் கூறுகிறார். கருமநெறி தவறுபவர்கள் அவரவர் செய்யும் பாவங்களுக்கு ஏற்ப நரகில் தள்ளப்பட்டு உயிர்கள் மிகவும் வருத்தமடையும்.
லக்ஷ்மி கடாக்ஷம்
இப்புராணம் ஸ்ரீலக்ஷ்மியைப் பற்றியும் கூறுகிறது. சிருஷ்டியின் போது கிருஷ்ணன் இடது பக்கத்திலிருந்து ஓர் அழகிய தேவி தோன்றி இரண்டு பகுதியாகி இடப்புறம் உள்ளது மகாலக்ஷ்மியாகவும், வலப்புறம் உள்ளது ராதிகாவாகவும் சிருஷ்டி ஆயின. கிருஷ்ணன் இடதுபக்கத்திலிருந்து நான்கு கரங்கள் கொண்ட நாராயணனும், வலப்புறத்திலிருந்து இருகரங்களும் தோன்ற நாராயணன் லக்ஷ்மியையும், கிருஷ்ணன் ராதையையும் மனைவியாக்கிக் கொண்டனர். மகாலக்ஷ்மி சொர்க்கத்தில் சொர்க்கலக்ஷ்மி என்றும், மன்னர்களிடம் ராஜ்யலக்ஷ்மி, இல்லங்களில் கிரகலக்ஷ்மி என்றும் பலவாறு பெயர்கள் பெற்றாள். பிரம்மா, விஷ்ணு, மனுவால் பூசிக்கப்படுகிறார். சூரிய, சந்திர மண்டலங்களில்

No comments:

Post a Comment