Tuesday, April 5, 2016

பத்ரிநாராயணன் கோவில்






பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது கிருஷ்ண அவதாரம் முடித்துக் கொண்டு, வைகுண்டம் செல்ல நினைக்கும் போது, தனது நண்பரும், அமைச்சரும், பரம பக்தருமான உத்தவர் கிருஷ்ணைரை சந்தித்து, தன்னையும் வைகுண்டம் அழைத்துச் செல்ல வேண்டினார். உத்தவருக்கும், அருச்சுனனுக்கு கீதா உபதேசம் செய்தது போன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர், உத்தவருக்கு உத்தவ கீதை எனும் ஆத்ம உபதேசம் செய்கிறார். பின்னர் உத்தவரிடம், உன் வாழ்நாள் காலம் முடிந்த பின் வைகுண்டம் வரலாம் என்றும், அதுவரை பதரிகாசிரமம் சென்று தங்கி பகவானை தியானித்துக் கொண்டு, வாழ்நாள் இறுதியில் என்னை வந்தடைவாய் என்று பகவான் கிருஷ்ணர் கூறியபடி, உத்தவர் பத்ரிநாத் அருகில் உள்ள பதரி ஆசிரமத்தில் தங்கி, பகவானை தியானித்துக் கொண்டு, வாழ்நாள் முடிந்த பின் வைகுண்டம் ஏகி பகவானை அடைந்தார் உத்தவர். பத்ரிநாத் கோயில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டதில் உள்ள மலைவாழிடமான பத்ரிநாத்தில் உள்ள ஒரு கோவில். இது பத்ரிநாராயணன் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு திருமால் கோவில். இந்தியாவில் உள்ள முக்கியமான இந்துக்கோவில்களுள் இதுவும் ஒன்று. வைணவர்களால் போற்றப்படும் 108 திவ்வியதேசங்களுள் ஒன்றாகும். இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இது ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (ஏப்ரல் கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்

No comments:

Post a Comment