Thursday, April 14, 2016

தேவேந்திரன்




தேவேந்திரன் என்பவர்  தேவ உலகத்தின் அரசனாவார். இவருடைய மனைவி இந்திராணி. இவர் வேதகால இந்து சமயத்தில், மிக முக்கியமான தேவர்களில் ஒருவராக உயர் நிலையில் வைத்து வணங்கப்பட்டவர். இந்துக்களின் மிகப்பழைய புனித நூலான ரிக் வேதத்தில் தலைமைக் கடவுளாகப் போற்றப்படுபவன் இந்திரனே. அவ்வேதத்திலுள்ள சுலோகங்களில் காற்பங்குக்கு மேற்பட்டவை இந்திரனைப் போற்றுவனவாகவே உள்ளன. இவனுடைய வீர தீரச் செயல்களைப் பற்றிய ஏராளமான குறிப்புக்கள் வேதங்களிலே காணப்படுகின்றன. மனத்தின் வேகத்தையும் கடந்த வேகத்தில் செல்லக்கூடிய தேரை உடையவனாகக் கூறப்படுகின்ற இந்திரன் ஐராவதம் என்னும் வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டவன் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவன் வஜ்ஜிராயத்தை ஆயுதமாகக் கொண்டவர். இவன் போர்க்குணம் கொண்ட கடவுளாகச் சித்தரிக்கப்படுவதன் காரணமாகப் போருக்குச் செல்லும் வீரர்கள் இந்திரனை வணங்கிச் செல்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்திரனுக்கு ஜெயந்தன் என்னும் பெயருடைய ஒரு மகன் உண்டு என்று கூறப்படுகிறது. அமிர்தத்தை குடித்த தேவர்களில் ஒருவன். யாகங்களில் படைக்கப்படும் ஹவிஸை (படையலை) அக்கினி இந்திரன் முதலான தேவர்களுக்கு பகிர்ந்து தருகிறான்.

No comments:

Post a Comment