Saturday, April 9, 2016

பிரம புராணம் பகுதி-4



பாலில், தானியங்களில், உடைகளில் சந்தனம், நகைகள், தூய இடங்கள், இல்லங்களில், பூமாலைகளில் மங்கல கலசங்களில் அவளைக் காணலாம்.
இந்திரன் லக்ஷ்மியைப் பூசித்தல்
ஒரு சமயம் கோபம் நிறைந்த துர்வாசன் விஷ்ணுவிடமிருந்து ஒரு பாரிஜாத மாலையைப் பெற்றார். அதனை இந்திரனுக்கு அளிக்க குடிபோதையில் இருந்த அவன் அம்மலரை யானையின் தலைமீது வைத்தான். மலர் பரிசை கவுரவிக்காமல் உதாசீனம் செய்த இந்திரன் செயல் பிரம்மஹத்தி தோஷத்துக்குச் சமமானது. இதனால் கோபம் கொண்ட முனிவர் லக்ஷ்மி (செல்வம்) அவனை விட்டு அகலுமாறு, யானை (ஐராவதம்) தலை வெட்டப்பட்டு சிவன் மகனின் தலையாகும் என்றும் சபித்தார். இந்திரன் துர்வாசரை வணங்கித் தன்னை மன்னித்தருளுமாறு வேண்டிட அவரும் மனம் குளிர்ந்து விஷ்ணுவின் பெருமை பற்றி விவரித்தார். முனிவரின் சாபப்பலனாக எல்லாவற்றையும் இழந்த இந்திரன் பிரகஸ்பதியுடன் பிரம்மனிடம் சென்று வேண்டிட, அவர் அனைவரையும் விஷ்ணுவிடம் அழைத்துச் சென்றார்.
லக்ஷ்மி வாசம்
விஷ்ணு, இந்திரன் இழந்த செல்வங்களை மறுபடியும் அடைவான் என்று கூறியதுடன், எவ்வாறெல்லாம் செல்வம் இழக்கப்படும் () லக்ஷ்மி இல்லாது போவாள் என்று கூறினார். துளசிச் செடி இல்லாத வீடு, சங்கு ஒலிக்காத வீடு, சாலக்கிராமம் பூசிக்கப்படாத இல்லம், விஷ்ணு பக்தர்களைப் பழிக்கும் கிரகம், பிராமணருக்கு உணவளிக்காத மனை, விருந்தினரை வரவேற்று உபசரிக்காத இல்லம் போன்ற இடங்களை லக்ஷ்மி நாட மறுப்பாள். சமயச் சடங்குகள் செய்யாத அந்தணன், விஷ்ணுவை பூசிக்காதவர், பிராமணர்களுக்கு மரியாதை அளிக்காமல், மற்றவர்களுக்கு சேவை செய்பவர்கள் ஆகியோர் வீட்டை விட்டு லக்ஷ்மி விலகி விடுவாள் என்றார்.
அமுத மதனம், லக்ஷ்மி தோற்றம்
பிறகு பிரம்மாவிடம் நாராயணன் தேவர்களைக் கொண்டு அமுதம் கடைய தேவவைத்தியர் தன்வந்திரி, உச்சைச்வரக் குதிரை, ஐராவதம் என்னும் யானை, சுதர்சன சக்கரம் போன்றவையுடன் இறுதியில் ஸ்ரீலக்ஷ்மியும் தோன்றினார். (அமுத மதனம் பற்றிப் புராணங்கள் மாறுபட்ட சிறு சிறு செய்திகளைத் தருகின்றன) ஸ்ரீலக்ஷ்மி தோன்றியவுடன் வனமாலை கொண்டு விஷ்ணுவுக்கு மாலை இட்டாள். அதனால் விஷ்ணு வனமாலி எனப்படுகிறார். சிவன், இந்திரன் மற்ற தேவர்கள் லக்ஷ்மி தேவியைத் துதி செய்தனர். ஸ்ரீலக்ஷ்மிக்கு சந்தனம், பாரிஜாத புஷ்பம் மேலும் பல மங்கலப் பொருள்கள் அளிக்கப்பட்டன. விசுவகர்மா நவரத்தின ஆசனம் அளித்தார். கங்கை நீர், மலர்கள், சந்தனம், சங்கில் புனிதப்புற்கள், தூபம், தீபம், அன்னம், சர்க்கரை, நெய், பால், வெற்றிலை, கருப்பஞ்சாறு, பட்டாடை ஆபரணங்கள் அளிக்கப்பட்டன. தேவர்களுக்கு வரங்கள் தந்து ஸ்ரீலக்ஷ்மி விஷ்ணுவின் மடியில் அமர்ந்தாள்.
கணேசர் உருவாதல்
ஐராவதத்தின் தலைமீது பாரிஜாதம் வைக்க அது புனிதமாகியது. அன்று முதல் அனைவரும் கணேசரை எல்லாவற்றிலும் முதன் முதலாகப் பூசிக்க வேண்டுமென்று ஆணையிட்டார். சனியின் சாபத்தால் சிவ, பார்வதி மகனாகத் தோன்றிய கணேசரின் தலை வெட்டப்பட்ட, ஐராவதத்தின் தலை பொருத்தப்பட்டு உருவான கணேசர் கடவுளர்களுக்கெல்லாம் முதல் கடவுளாகத் துதிக்கப்படுகிறார்.
ராதாகிருஷ்ணன் ராதையைப் பூசித்தல்
கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று ராதையைப் பூசிக்க வேண்டும். மலர்கள், தூபம், தீபம், கந்தம், ஆபரணம், பழங்கள், இனிப்புகளுடன் பதினாறு பொருள்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ராதையின் பேரை முதலில் சேர்த்து ராதா கிருஷ்ணா, இராதா-மாதவா என்று உச்சரித்துப் பூசிக்க வேண்டும். சந்தனம், குங்குமம், பெற்று மந்தஹாச முகத்துடன், அழகாக முடிந்த கூந்தல், கை, கால்கள், விரல்கள் முழுவதும் ஆபரணங்களுடன் அவள் காட்சி தருவாள். வராக கல்பத்தில் ராதை கோகுலத்தில் விருஷபானு, கலாவதி தம்பதியர்க்குத் திருமகளாய்த் தோன்றினாள். வைசியர்களான அவர்கள் அவளை ராயனன் என்ற வைசியனுக்கு மணமுடிக்க முனைந்த போது அவள் தன் நிழலை அங்கு விட்டு விட்டு கோலோகத்திக்குத் திரும்பி வந்து விட்டாள். நிழலுக்கும் ராயனனுக்கும் திருமணம் நடந்தது. பன்னிரண்டு வயதான ராதையின் நிழலுக்கே விவாகம் நடந்தது. அதன் பின் பதினான்கு ஆண்டுகள் கழிந்து கோகுலத்தில் கிருஷ்ணன் பிறந்தான். நந்தகோபர் மனைவி யசோதையின் சகோதரனே ராயனன். அவன் கிருஷ்ணனுக்குத் தாய்மாமன்.
கிருஷ்ணன், ராதை கோகுலத்தில் சிலகாலம் வாழ்ந்து பிறகு பிரிந்தனர். கோகுலத்தில் ஒருநாள் கிருஷ்ணன் விரஜா என்பவளுடன் ஆடிக்கொண்டிருக்கையில் அதுபற்றி கேள்விப்பட்ட ராதை தேரேறி அவனிடம் விரைந்தாள். அவளிடம் பொறாமை, கோபம் குடிகொண்டிருந்தது. இதுபற்றி கிருஷ்ணனின் தோழன் சுதாமன், கிருஷ்ணனை எச்சரித்தான். எல்லோரும் ஓடிவிட விரஜா மட்டும் தற்கொலை செய்து கொண்டாள். கோலோகத்தைச் சுற்றி விரஜா ஒரு நதியானாள். அவள் தோழிகள் அதன் உபநதிகள் ஆயினர். கிருஷ்ணனோ, விரஜாவோ இல்லாதது கண்ட ராதை தன் இருப்பிடம் திரும்பினாள். கிருஷ்ணன், சுதாமனைக் கண்டவுடன் ராதை கண்டவாறு ஏசினாள். இதனால் கோபம் கொண்ட சுதாமா ராதையைத் திருப்பித் திட்டினான். கிருஷ்ணன் எதிரில் அவமானப்பட்ட ராதை சுதாமனை அசுரனாகும்படி சாபம் கொடுத்தாள். உடனே சுதாமனும் அவளை இடைக்குலத்தில் பிறந்து கிருஷ்ணனைப் பிரிந்து அவதிப்பட வேண்டுமென்று சபித்தான்.
சாபம் தீர்ந்த பிறகு அனைவரும் கோலோகம் அடைந்தனர். ராதையைப் பூசிப்பதால் துரதிருஷ்டங்களும், உடல் நலக்குறைவும் நீங்கும். சுயஜனன் என்ற மன்னன் ஒரு சமயம் சுதபாசன் என்ற அந்தணணால் சபிக்கப்பட்டான். உன்னை லக்ஷ்மி விட்டுச் செல்வாள். உன் இராஜ்ஜியத்தை இழப்பாய். மந்த புத்தியுடன் தொழுநோயால் பாதிக்கப்படுவாய் என்று பிராமணன் சபித்தான். மன்னன் மன்னிப்பு வேண்ட சுதபாசன் என்னும் அந்த அந்தணன் ராதையைப் பூசித்து சாப நிவாரணம் பெறுமாறு கூறிட மன்னன் அவ்வாறே செய்து தொல்லைகள் நீங்கப் பெற்றான்.
துர்க்கையும், துர்க்கை வழிபாடும்
துர்க்கை என்ற பெயர், அவள் அதே பெயர் கொண்ட அரக்கனைக் கொன்றதால் ஆகும். மேலும் பல அரக்கர்களையும் அவள் கொன்றிருக்கிறாள். தேவர்களும், மற்ற கடவுளர்களும் பலவித ஆயுதங்களை அளித்தனர். மற்றும் அவர்களுடைய சக்தியெல்லாம் இணைந்தே அவள் வடிவெடுத்தாள். அவள் அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்தாள். துர்க்கை சிவபெருமானின் மனைவி. எனவே சிவை என்ற பெயரும் அவளுக்கு உண்டு. நாராயணன் சக்தியும் பெற்றிருப்பதால் அவள் நாராயணி எனப்படுகிறாள். விஷ்ணுவால் தோற்றுவிக்கப்பட்டவள் எனவே வைஷ்ணவி என அழைக்கப்படுகிறாள். விஷ்ணு மாயை என்ற பெயரும் கொண்டுள்ளாள். மேலும் அவளுக்குப் பல பெயர்கள் உண்டு. இஷானி, சத்தியை, நித்தியை, சனாதனி, பகவதி, சர்வாணி, சர்வமங்கள, அம்பிகை, கவுரி, பார்வதி ஆகியவை. கிருஷ்ணனே துர்க்கையைப் பூசிக்கிறான். பிரம்மா, சிவன் மற்றும் இந்திராதி தேவர்களும் அவளைத் துதிக்கின்றனர். மற்றொரு கல்பத்தில் மன்னன் சுரதனும், வைசிய சமாதியும் அவளைப் பூசித்தனர்.
நந்தி மன்னன், சுரதா மன்னனை நாட்டை விட்டே விரட்டிவிட்டான். அவன் குதிரை மீது அமர்ந்து நாட்டை விட்டு ஓடினான். புஷ்பரத்ரா என்னும் ஆறு பாய்கின்ற காட்டை அடைந்தான். ஆற்றங்கரையில் மன்னன் சுரதா, சமாதி என்ற வைசியனைக் கண்டான். சமாதியை அவன் மனைவி மக்கள் வீட்டை விட்டு துரத்தி விட்டனர். சுரதாவும், சமாதியும் இணைந்து பயணம் செய்து புஷ்கர தீர்த்தத்தை அடைந்தனர். அங்கே மேதஸ் என்ற முனிவரைக் கண்டனர். துர்க்கையைப் பூசை செய்யுமாறு அவர் அறிவுரை தந்தார். நெடுநாட்கள் தவம் செய்த இருவரின் முன் துர்க்கை தோன்றி சுரதாவுக்கு நாட்டையும், சமாதிக்குக் கிருஷ்ணனுடன் இணைவதையும் அருளினாள். துர்க்கை மறைந்த பிறகு மண்ணால் அவன் உருவமைத்து மன்னன் வழிபட்டு வந்தான். அரிசி, இனிப்புப் பண்டங்கள், மலர்கள், தூபம் போன்ற சாதாரண படையல்களுடன் காய்கறிகள், மிருக பலியையும் சுரதா படைத்தான், அதாவது ஆடு, மான், பூசணிக்காய் ஆகியவை. பூசைக்குப் பின்னர் சுரதா அம்மன் உருவை நீரில் சேர்த்துவிட்டான். ஆச்வின் மாதத்தில் துர்க்கை பூசையை மன்னன் சுரதா ஆரம்பித்து வைத்தார்.
ரத்தின இருக்கையில் துர்க்கையில் வடிவத்தை இருக்கச் செய்ய வேண்டும். உருவம் பொன்னிறத்தில், முக்கண்களுடன், ரத்தின கிரீடம் மற்று ஆபரணங்களும் அணிந்து இருக்க வேண்டும். கூந்தல் இடதுபுறம் சுருட்டப்பட்டும், நெற்றியில் சந்தனம், குங்குமம் நிறைந்தும் இருக்க வேண்டும். மிருகபலி இல்லாமல் நடத்தப்படும் துர்க்கை பூசை வைஷ்ணவி () சாத்துவிக பூஜை எனப்படும். அது வைஷ்ணவர்களால் செய்யப்படுகிறது. விலங்குகளைப் பலி கொடுத்து செய்யப்படும் பூஜை துர்க்கை பூஜை.
ராஜசிக பூஜை : ஆஸ்வின் (புரட்டாசி) மாதத்தில், கிருஷ்ண பக்ஷத்தில் நவமி அன்று தொடங்கி பதினைந்து நாட்கள் நடைபெற வேண்டும். சுக்கில பக்ஷ தசமி அன்று துர்க்கையை நீரில் சேர்க்க வேண்டும். பலிகளைச் சப்தமி நவமி திதிகளில் அளிக்கலாம். ஆனால், அஷ்டமியில் கூடாது.
மற்ற பெண் தெய்வங்கள்
அடுத்து, நாரதருக்கு ஸ்வாஹா, ஸ்வாதா, தக்ஷிணா, ஷத்தி, மங்களசண்டி, மனசா, சுரபி ஆகிய பெண்தெய்வங்கள் பற்றி கூறப்படுகிறது.
ஸ்வாஹா : சிருஷ்டியின் துவக்க காலத்தில் தேவர்கள் பிரம்மலோகம் சென்று அவர்களுடைய முதல் சாப்பாடு பற்றிக் கேட்க, பிரம்மாவின் வேண்டுகோளை ஏற்று யாகவடிவில் விஷ்ணு இருக்க யாகத்தீயில் தேவர்களுக்கான உணவு அளிக்கப்பட்டது. ஆனால், அது அவர்களைச் சென்று சேரவில்லை. அதனால் தேவர்கள் மறுபடியும் பிரம்மாவை வேண்ட கிருஷ்ணர் பிரகிருதியை வேண்டுமாறு பிரம்மாவுக்கு அறிவுரை தந்தார். பிரகருதி, ஸ்வாஹா ஆனாள். அதுவே அக்னியின் எரிக்கும் சக்தி. ஸ்வாஹாவின் உதவியின்றி அக்னியால் எதையும் எரிக்க முடியாது என்று பிரம்மா அக்னியிடம், ஸ்வாஹாவை மணந்து கொள்ளுமாறு கூறினார். அவர்களுக்கு மூன்று மகன்கள் தோன்றினர். அவையே தாக்ஷிணா, காருதஸ்பத்ய, ஆஹவனியம் என்பவை. எனவே தீயில் பொருள்களை இடும் போது ஸ்வாஹா என்பதைச் சேர்த்து மந்திரத்தை சொல்ல வேண்டும்.
ஸ்வாதா : ஆரம்ப காலத்திலேயே பிரம்மா முன்னோர்களின் அதாவது பித்ருக்களையும் தோற்றுவித்தார். பிராமணர்கள் பித்ருக்களுக்குப் பிண்டங்கள் தரவேண்டுமென்று கட்டளையிட்டார். முக்கியமாக நீத்தார் கடன் எனப்படும் மறைந்த முன்னோர்களுக்காக செய்யப்படும் சிரார்த்தங்களில் இடவேண்டும். துவக்க நிலையில் அவை பித்ருக்களைச் சென்று சேரவில்லை. எனவே, பசி கொண்ட பித்ருக்கள் பிரம்மனிடம் சென்று முறையிட அவர் ஸ்வாதா என்ற தேவதையைத் தோற்றுவித்து அவனை முன்னோர்களுக்கு அளித்தார். எனவே பித்ருக்களுக்குப் பிண்டம் அளிக்கும்போது மந்திரத்துடன் ஸ்வாதா சேர்த்து உச்சரிக்க வேண்டும். அப்போதுதான் நாம் இடும் பிண்டம் பித்ருக்களைச் சென்றடையும்.
தக்ஷிணை : அதேபோல் யாகத்தின் மனைவி தக்ஷிணை. எனவே, சமயச் சடங்கு முடிந்தவுடன் பிராமணனுக்குத் தக்ஷிணை அளிக்க வேண்டும். இன்றேல் அந்தச் சடங்கு பயனற்றதாகும். எனவே யாகம் முடிந்தவுடன் பிராமணர்களுக்குத் தக்ஷிணை கட்டாயம் தரவேண்டும்.
ஷஷ்தா : பிரகிருதி அன்னையில் ஆறில் ஒரு பங்கு ஷஷ்தா எனப்படுகிறது. அவள் கந்தன் () கார்த்திகேயனின் () தேவசேனனின் மனைவி ஆவாள். பிரம்மாவின் மனதிலிருந்து தோன்றிய அவள் குழந்தைகளின் தேவதை; பிள்ளை வரம் அளிப்பவள் மற்றும் சிசுக்களைக் காத்து நீண்ட நாட்கள் வாழ்ந்திட அருள்புரிபவள். மன்னன் பிரிய விரதன் ஸ்வயம்பு மனுவின் புத்திரன். அவன் தவமிருந்து ஒரு மகனை அடைய அவன் இறந்தே பிறந்தான். மன்னன் குழந்தையுடன் மயான பூமிக்குச் சென்று தன்னை மாய்த்துக் கொள்ள முனைந்தான். அப்போது ஷஷ்தா தேவி அவன் முன் தோன்றி குழந்தைக்குப் புத்துயிர் ஊட்டினாள். தன்னைப் பற்றி உலகுக்கு அறிவிக்குமாறு அவனிடம் சத்தியம் செய்து வாங்கினான். ஒவ்வொரு மாதமும் ஷஷ்டி அன்று ஷஷ்டாதேவியைப் பூசிக்க வேண்டும். மற்றும் சிசு பிறந்தா ஆறாம் நாளும், இருபத்தொன்றாம் நாளும் அவளைத் துதிக்க வேண்டும். சிசுவைச் சார்ந்த அனைத்து நாட்களிலும் அவனைப் பூசிக்க வேண்டும். பூ, பழம், தீப, தூப நைவேத்தியங்களை அளிக்க வேண்டும்.
மங்கள சண்டி : நீலநிறக் கண்களும், அழகுமேனியும் கொண்ட மங்களசண்டி, துர்கையின் வடிவே. பெண்களுக்குக் கண்கண்ட தெய்வம். அவள் நல்வாழ்வு, செழுமை, செல்வமுடைய வாழ்வு ஆகிய மங்களங்களைக் குறையாமல் அளிக்கக்கூடிய திறமை கொண்டவள். சிவபெருமான் திரிபுராசுரர்களெனும் அரக்கர்களுடன் போர் செய்கையில் சில கஷ்டங்களைச் சமாளிக்க வேண்டி இருந்ததால் துர்கையைத் துதி செய்தார். விஷ்ணு கூறியவாறு, சிவன் முன் துர்கை மங்கள சண்டியாகத் தோன்றி பரமனின் திறமை, தீரம் ஆகியவற்றை அதிகரித்து அருளினார். அதுவே மங்கள சண்டிகைக்கு நடத்தப்பட்ட முதல் பூசனை. அடுத்து விஷ்ணுவுக்கும், பிருதிவிக்கும் பிறந்த அங்காரகன் அவளைத் துதி செய்தான். மனு குலத்தோன்றல் மன்னன் மங்களன் அவளை வழிபட்டான். அடுத்து ஸ்திரீகள் மங்கள நாயகியைச் செவ்வாய்க் கிழமை அன்று பூசித்தனர். அதன்பின் ஆண்களும் அவளை வழிபடத் தொடங்கினர். இவ்வாறு அவள் பெருமையும், புகழும் பரவத் தொடங்கின. செவ்வாயன்றே அவள் பூசை. (சண்டி=திறமையுள்ளவள். மங்களா-நலமும் செல்வமும் அளிப்பவள். எனவே மங்கள சண்டி எனப்படுகிறாள்.)
மனசா : மனம் அதாவது காசியபரின் மனசிலிருந்து தோன்றியதால் இவள் மனசாதேவி எனப்படுகிறாள். அவள் மிகவும் அழகாகத் தோற்றம் கொண்டிருப்பதால் உலகிலேயே அழகி என்ற பொருளோடும் ஜகத்கௌரி என்றும் பெயர் பெற்றாள். நாகராஜன் சோதரி என்பதால் நாகவாகினி (நாக சகோதரி) என்று பெயர். அவள் நாகங்களுக்கு அரசி என்ற கருத்தில் நாகேச்வரி எனப்படுகிறாள். அவள் பாம்பு விஷத்தை அகற்றுவாள் (ஹரனா) என்பதால் விஷஹாரி எனப்படுகிறாள். அஸ்திக முனிவர் தாய் ஆனதால் அஸ்திக மாதா எனப்படுகிறாள். மனசா கிருஷ்ணனை நோக்கி தவம் செய்து சக்திபெற்றாள். மேலும், அவள் சிவபக்தையும் கூட. அவள் பாம்பை யஜ்ஞோபவிதமாகத் தரித்திருக்கிறாள். அவளுக்கு தீபம், மலர்கள், தூபம் அளிக்கலாம்.
பழங்காலத்தில் மக்கள் பாம்பென்றால் மிகவும் பயந்தனர். ஏனெனில், பாம்பு கடித்தால் மரணம் தான். அதற்கு சிகிச்சை இல்லை என்ற நிலை. பிரம்மாவின் அறிவுரைப்படி காசியபர் மானசாவைத் தோற்றுவித்தார். பாம்பு கடிக்கான மந்திரத்திற்கு அவள் அதிஷ்டமான தேவதை ஆவாள். மானசாதேவி சிவனைப் பூஜித்து இறந்தவரை உயிர்ப்பிக்கும் கலையைக் கற்றாள். அவள் புஷ்கரத்தில் கிருஷ்ணனைப் பூசை செய்ய உலகம் முழுவதும் உன்னைப் பூசிக்கும் என்றார் அவர். ஜரக்கரு என்ற முனிவரை மனசா மணந்தாள். ஒரு மாலை, மனசாவின் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தார். சூரியாஸ்தமன நேரம் ஆகி விட்டது. ஜரத்கரு விழித்தெழுந்து மாலை சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்பதற்காக அவரை எழுப்பினாள். இல்லாவிட்டால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும் என நினைத்தாள். ஆனால் தன்னை எழுப்பியதற்காக மிக்க கோபம் கொண்ட ஜரத்கரு கணவனுக்குத் தீங்கு செய்யும் மனைவி கும்பிபாக நரகம் அடைவாள். கணவன் தூக்கத்தைக் கலைக்கும் மனைவி காலசூத்திர நரகத்தை அடைவாள். இவ்வாறு கூறி அம்முனிவர் தவம் செய்யச் சென்றுவிட்டார்.
மனசா கைலாயம் சென்றாள். அங்கே அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் அஸ்திகன். அஸ்திகன் வளர்ந்து சிவனின் சலுகையைப் பெற்றான். மனசா காசியபர் ஆசிரமம் சேர்ந்தாள். பரீக்ஷித்து தக்ஷகன் என்ற பாம்பால் கடிக்கப்பட்டான். அதனால் பரீக்ஷித்தின் மகன் ஜனமேஜயர் சர்ப்ப சஸ்திர யாகம் செய்து பாம்புகள் அதில் விழுந்து மரிக்க தக்ஷகன் இந்திரனிடம் சரணடைய, இந்திரன் மனசா தேவியைப் பிரார்த்திக்க, அவள் தன் மகன் அஸ்திகனை தக்ஷகனைக் காப்பாற்ற ஆணையிட்டாள். இதனால் மகிழ்ச்சி அடைந்த இந்திரன் மனஸாதேவியை மணிமய ஆசனத்தில் இருத்தி, மந்தாகினி ஆற்றின் புனித நீரால் அபஷேகம் செய்வித்துப் பூசை செய்தான். மனசா தேவியைப் பூசிப்பவர் பாம்பைக் கண்டு அச்சங்கொள்ளத் தேவையில்லை ஏனெனில் அவர் அத்தேவியின் பாதுகாப்பில் இருக்கிறார்.
சுரபி : சுரபி, பசுக்களுக்கெல்லாம் தாய் ஆவாள். ஒருநாள் கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் இருக்கும்போது பால்குடிக்க விரும்பினார். உடனே அவருடைய இடதுபுறத்திலிருந்து சுரபியைத் தோற்றுவித்தார். ஒரு மணிமயக் கலத்தில் பால் கறந்து குடித்தார். மீதமுள்ள பால் க்ஷீர சரோவரம் (பாற்கடல்) என்ற பெரிய ஏறி (நீர்நிலை) ஆயிற்று. இந்த இடம் கிருஷ்ணன், ராதை, கோபியர்களுக்கு உல்லாச இடமாயிற்று. சுரபியின் உடலிலிருந்து பல காமதேனுக்குள் தோன்றின. காமதேனு பசுக்கள் வேண்டியதெல்லாம் அளித்தன. இவற்றிலிருந்து தோன்றியவையே இன்று உலகில் காணும் பசுக்கள். கிருஷ்ணரே சுரபியை வழிபட்டார். வராக கல்பத்தில் ஒரு சமயம் விஷ்ணு மூவுலகிலும் பாலே இல்லாமல் செய்ய, பிரம்மாவின் ஆணைப்படி தேவர்கள் எல்லாம் சுரபியைப் பிரார்த்திக்க உலகில் மறுபடியும் பால் நிரம்பியது. தீபாவளிக்கு அடுத்த நாள், கார்த்திகை மாதத்தில் சுரபி பூசை சிறப்பானது. இத்துடன் பிரகிருதி காண்டம் நிறைவு பெறுகிறது. சுரபிப் பூஜையில் பொன், பூ, ஆடை, அணிகலன்கள், பசு, கன்று அளித்தல் சிறந்தது.
கணேசர்-கணேச காண்டம்
ஸ்ரீகணேசர் வரலாற்றைக் கூறும் இப்பகுதி கணேச காண்டம் எனப்படும். பிரகிருதி, கிருஷ்ணனை முன்னிட்டு விரதம் செய்து கணேசனை மகனாகப் பெற்றாள். உண்மையில் கிருஷ்ணன் தன்னில் ஓர் அம்சத்தையே கணேசராக மாற்றினார். மக்கள் ÷க்ஷமத்தை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறு தரப்படுகிறது. நாரதர் வேண்டுகோளை ஏற்று நாராயணன் கணேச காண்டத்தைக் கூறினார். பார்வதி புண்யக விரதம் அனுஷ்டித்தாள். கிருஷ்ணனே ஒரு குழந்தையாக அவள் படுக்கையில் தோன்றியது. பெற்றோர்கள் குழந்தையை வாரி எடுத்து முத்தமிட்டு முனிவர்கள், பிராமணர்கள், யாசகர்களுக்குத் தானதர்மங்கள் செய்தனர். இவ்வாறு கோலாகலமாக விழா நடைபெறுகையில் சூரிய புத்திரன் சனி அங்கு வந்தான். சனி குழந்தையைக் கண்டுகொள்ளாமலே இருக்க, பார்வதி அது குறித்து சனியைக் கேட்டாள்.
சனி மீது சாபம்
அப்போது சனி, என் மீது ஒரு சாபம் இருக்கிறது. அதன்படி தான் எதை நோக்கினாலும் அது அழிய வேண்டும். சித்திரதன் என்ற கந்தர்வன் மகள் என் மனைவி. அவளை உதாசீனப்படுத்தியதால் அவள் இவ்வாறு எனக்குச் சாபமிட்டாள் என்றான் சனி. பார்வதியும், அங்குக் குழுமியிருந்த பெண்களும் அதுகேட்டு நகைத்தனர். சனி கூறியதைச் சாதாரணமாக எண்ணிப் பார்வதி சனியைத் தங்களைப் பார்க்கும் படி கூறினாள்.
சனி பார்வை
இதனால் உந்தப்பட்ட சனி குழந்தை மீது மட்டும் தன் பார்வையைச் செலுத்தினான். நேரிடைப் பார்வையாக இன்றி ஓரக்கண்ணால் மட்டுமே பார்த்தான். அவன் பார்வை பட்டவுடன் பார்வதியில் மடியிலிருந்த குழந்தை தலையின்றிக் கிடந்தது. (கோலோகத்தில் கிருஷ்ணனுடன் தலை இணைந்து விட்டது.) இதைக்கண்டு அனைவரும் திகைத்திட, பார்வதி மயக்கமுற்றாள்.
கணேசனுக்குத் தலை
கிருஷ்ணன் கருடாரூடனாய் ஓர் ஆற்றங்கரையில் ஐராவதம் உறங்குவதைக் கண்டு அதன் தலையை சுதர்சன சக்கரத்தால் அகற்றி கைலாயம் அடைந்து தலையின்றிக் கிடந்த பார்வதியின் குழந்தையின் கழுத்தில் பொருத்தி உயிர்பெறச் செய்தார். பார்வதியையும் மயக்கம் தெளிந்து எழச் செய்தார்.
சனி ஊனமாதல்
இந்நிகழ்ச்சியால் எல்லோரும் மகிழ்ச்சி கொண்டு விழா எடுத்து பிராமணர்களுக்கும், முனிவர்களுக்கும் தான தருமங்கள் அளித்துக் கொண்டாடினர். எனினும், சனி மீது பார்வதி கொண்ட கோபம் தணியவில்லை. அவள் சனியை முடமாகும்படிச் சபித்தாள். நடந்த சம்பவங்களுக்கு சனி காரணமில்லை என்றும், பார்வதியின் உந்துதலின் பேரிலேயே குழந்தையை சனி பார்த்ததாகவும் கூறி, தேவர்கள் பார்வதியை சமாதானப்படுத்த முயன்றனர். அவள் சினம் சிறிது குறைந்தாலும், சனியின் ஊனம் முழுவதும் குணமாகாமல் அதன் பலன் சிறிது காணப்பட்டது.
குழந்தை கணேசனுக்கு பரிசுகள் குவிந்தன. பிரம்மா கமண்டலம் தந்தார். பிருதிவி எலி வாகனம் அளித்தாள். பார்வதி இனிப்பு திண்பண்டங்கள் தானியங்களாலான பணியாரம், கொழுக்கட்டை, பால், தேன், பழம், நெய், தாம்பூலம் அளித்தாள். கணேசனை இமவானும், மேனகையும், பார்வதியும் பூக்கொண்டும், சந்தனம் புனிதநீர் படைத்தும் பூசித்தனர்.
கணேசனின் பல பெயர்கள்
கஜம் (யானை) ஆனனம் (முகம்) கொண்டதால் கணேசர் கஜானனன் எனப்படுகிறார். வயிறு பெருத்து நீண்டிருப்பதால் லம்போதரன் என்றும், பரசுராமன் ஒரு தந்தத்தை ஒடித்து விட்டதால் ஏகதந்தன், ஒற்றைக்கொம்பன் என்றும், விக்கினங்களை (தடைகளை) போக்குவதால் விக்கினஹரன் () விக்னேசன் என்றும் கணேசர் அழைக்கப்படுகிறார். மேலும் அவர்க்கு ஹேரம்பன், விநாயகர், சூர்ப்பகர்ணன், கஜபக்தர்கள், குகராஜஸ என்று பலபெயர்கள் உண்டு. விஷ்ணுவின் தீர்ப்புப்படி கணேசன் முதற்கடவுளாகப் பூசிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் எடுத்த காரியம் பலன் தராது. கணேசனுக்கு புஷ்டியையும், கார்த்திகேயனுக்கு (முருகனுக்கு) தேவ சேனையையும் சிவ,பார்வதி மணம் செய்வித்தனர்.
நாரதர் கேள்வி : கணேசர் விக்கினம் தவிர்ப்பவர் என்றால் அவர் தலை எப்படி வெட்டப்பட்டது. அந்த விக்கினம் எப்படி நிகழ்ந்தது என்று கேட்டார். அதற்கு நாராயன் கூறிய விவரம் : மாலி, சுமலி என்பவர்கள் சிவபக்தர்கள். சூரியன் அவர்களைக் கொல்ல முயற்சிக்க சிவபிரான் சூரியனைத் தனது சூலத்தால் அடிக்க உலகமே இருண்டு போயிற்று. இதுகண்ட சூரியனின் தந்தை காசியபர் கோபம் கொண்டு தன் மகன், சூரியனை சிவபெருமான் சூலத்தால் அவன் மார்பில் தாக்கியதால் சிவபாலன் கணேசன் தலை வெட்டப்படும் என்று சபித்தார். விஷ்ணு ஆனைத்தலையைப் பொருத்தினார். அதிலிருந்த இரண்டு தந்தங்களில் ஒன்று இல்லாமல் போனது ஏன்? என்று நாரதர் கேட்டார்.
ஏகதந்தன்
ஜமதக்கினி முனிவரின் மகன் பரசுராமன். ஜமதக்கினி கார்த்தவீரியன் என்ற அரசனால் கொல்லப்பட்டான். எனவே பரசுராமர் மிக்கக் கோபம் கொண்டு எல்லா அரசர்களையும் கொன்று குவித்தார். சிவபெருமான் பரசுராமனின் குருவானதால் அவருக்கு மரியாதை செலுத்த பரசுராமன் சிவன் இருப்பிடம் சென்றார். அப்போது அவரை உள்ளே செல்ல விடாமல் கணேசர் தடுத்தார். கணேசர் மரியாதையுடன் பரமன் நித்திரையிலிருப்பதாகக் கூறியும், பரசுராமன் தான் உடனே பரமனைக் காணவேண்டும் என்று வற்புறுத்தி உள்ளே செல்ல முயன்றார். இருவருக்கும் தகராறு முற்றியது. அப்போது கணேசர் தந்தத்தை

No comments:

Post a Comment