Saturday, April 9, 2016

இந்துக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பிரம புராணம் பகுதி-1



பிரம புராணம் பகுதி-1
சிருஷ்டி
பர பிரம்த்மதின் இச்சைப்படி இருண்டு நீர், காற்று இன்றி இருந்த அண்டம் சிருஷ்டிக்கப்பட்டது. பர பிரம்த்மதின் வலது புறத்திலிருந்து நாராயணன் தோன்றினார். சத்துவ குணம் நிறைந்தவராய் கைகளில் சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர், கவுஸ்துபம், வில் கொண்டு தோற்றம் உண்டாயிற்று. நான்கு கரங்களுடன் நீலநிறம் கொண்டிருந்தான் நாராயணன். நாராயணன் ஆசனத்தில் அமர்ந்தான். அடுத்து பர பிரம்த்மதின் இடதுபுறத்திலிருந்து தாமச குணத்துடன் கூடிய மூன்று கண்களுடன், சடாமுடியுடன் திரிசூலம் ஏந்தியவராய் சிவன் தோற்றுவிக்கப்பட்டார். பின் பிரம்மன் தோன்றினான். அவன் ராஜஸ குணம் நிறைந்தவன். முதியவனாய், வெள்ளை முடியுடன் வெண்ணிற ஆடை அணிந்து, கையில் கமண்டலம் ஏந்தி நான்கு முகங்களுடன் தோன்றினான். இருவரும் அவர்களுக்கான இருக்கையில் அமர்ந்தனர்.
பர பிரம்த்மதின் மார்பிலிருந்து யமதர்மராஜன் தோன்றினான். பர பிரம்த்மதின் வாயிலிருந்து வெள்ளாடைகளை உடுத்தி, வீணையும் புத்தகமும் ஏந்தியவளாய் சரசுவதி தோன்றினாள். பர பிரம்த்மதின் மனதிலிருந்து பொன்னிற மகாலக்ஷ்மி தோன்றினாள். ராஜசகுணம் கொண்ட அவள் சுவர்க்கத்தில் சுவர்க்கலக்ஷ்மி என்றும், மன்னர்களுக்கு ராஜலக்ஷ்மி என்றும் தோற்றம் அளித்தாள். பர பிரம்த்மதின் எண்ணத்திலிருந்து போர்த் தேவதையான துர்க்கைத் தோன்றினாள். இவ்வாறே பர பிரம்த்மதிதிலிருந்து மந்திர தேவதையான சாவித்திரியும், மனக்காட்சியிலிருந்து காதல் தேவன் மன்மதனும் மன்மதனின் இடப்பக்கத்திலிருந்து அவன் மனைவி ரதிதேவியும், தோன்றிய பின் அக்கினி, வருணன், வாயு ஆகியோரும் அவர்களது மனைவியராகிய ஸ்வாஹா, வருணனி, வாயவி ஆகியோரும் படைக்கப்பட்டனர்.
அடுத்து பர பிரம்த்மதிடமிருந்து பேரண்டம் தோன்றியது. அவ்வமயம் எங்கும் நீர் மயம். அந்த அண்டம் நீரில் மிதந்தது. அதிலிருந்து ஒரு பெரிய உருவம் தோன்றியது. அதுவே மகாவிஷ்ணு. மகாவிஷ்ணுவின் காதுகளிலிருந்து மது, கைடபன் என்ற இரண்டு ராக்ஷசர்கள் தோன்றினர். அவர்கள் தோன்றிய உடனே பிரம்மாவைக் கொல்லப் போக நாராயணன் அவர்களை தொடைகளுக்கு இடையில் நசுக்கிக் கொன்று அவர்கள் உடல் கொழுப்பிலிருந்து நிலவுலகைத் தோற்றுவித்தார். (மேதா-கொழுப்பு) எனவே பூமி மேதினி எனப்படுகிறது.
காலம் உருவாதல்
கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்கு. இவை நான்கும் சேர்ந்து மகாயுகம் எனப்படும். 360 மகாயுகங்கள் ஒரு திவ்ய யுகம் (இது கடவுளர்களுக்கு () தேவர்களுக்கு ஒரு யுகம்) 71 திவ்யயுகங்கள் சேர்ந்தது ஒரு மன்வந்தரம். 14 மன்வந்தரங்கள் சேர்ந்து பிரம்மாவுக்கு ஒருநாள். அத்தகைய 360 நாட்கள் சேர்ந்து பிரம்மாவுக்கு ஓர் ஆண்டு. அத்தகைய 108 ஆண்டுகள் கிருஷ்ணனுக்கு ஒரு நிமிடம் () கல்பம் எனப்படும். இவ்வாறு பல கல்பங்கள், பிரம்ம கல்பம், வராகக்கல்பம், பத்ம கல்பம் போன்றவை. பிரம்ம கல்பத்தில் மது கைடபர்களின் உடலிலிருந்து பூமி தோற்றுவிக்கப்பட்டது. வராகக் கல்பத்தில் உலகம் காணாமல் போகத் திருமால் வராகவதாரம் எடுத்து அதை மீட்டார். பத்ம கல்பத்தில் பிரம்மா திருமால் உந்திக்கமலத்தில் தோன்றி பூலோகம், புவர்லோகம், சுவர்லோகங்களைச் சிருஷ்டித்தார்.
படைப்பு தொடர்கிறது
பிரமன் உலகைப் படைத்தார். அடுத்து சுமேரு, கைலாயம், மலயம், ஹிமாலயம், உதயசலம், அஷ்டாசலம், சுபேலம், கந்தமாதனம் என்று மலைகளாய் படைத்தார். பல ஆறுகளையும், நகரங்களையும், ஊர்களையும் படைத்தார். லவண, இக்ஷு, சுரா, சர்பி, ததி, துக்த, ஜல சமுத்திரங்களையும், ஜம்புத்வீபம், சுகத்வீடம், குசத்வீபம், பிலக்ஷத்வீபம் என்ற ஏழு நிலப்பிரிவுகளையும் உருவாக்கினார். அடுத்து பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹர்லோகம், ஜனலோகம், தபோலோகம், சத்திய லோகம் என்பவற்றையும், அதல, விதல, சுதல, தலாதள, மஹாதள, பாதாள, ரஸதல நரகங்களையும் சிருஷ்டித்தார். இவை அனைத்தும் கூடியே பிரம்மாண்டம் எனப்படும். இவை எல்லாம் மாயா உருவங்களே. விஷ்ணுலோகம், சிவலோகம், கோலோகங்கள் மட்டும் அழியாமல் நிலைத்திருப்பன. பிரம்மனின் மனைவி சாவித்திரிக்கு நான்கு வேதங்கள் தோன்றின. மற்றும் ஆறு ராகங்கள், முப்பத்தாறு ராகிணிகள், கால அளவு ஆகியவை படைக்கப்பட்டன.
பிரம்மனது நாபியிலிருந்து தேவலோகச் சிற்பி விசுவகர்மா தோன்றினார். அடுத்து எட்டு வசுக்கள், சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் என்ற நால்வரைப் படைத்து, உற்பத்தியைப் பெருக்கச் சொல்ல அந்த நால்வரும் கிருஷ்ணனை நோக்கித் தவம் செய்யச் சென்றனர். இதனால் கோபம் கொண்ட பிரம்மனது நெற்றியிலிருந்து தோன்றிய தீயிலிருந்து ருத்திரன் தோன்றினான் (சில புராணங்கள் பதினோறு ருத்திரர்கள் என்று கூறும்).
பிரம்மனது வலது செவியிலிருந்து புலஸ்தியரும், இடது காதிலிருந்து புலஹரும், வலது புறத்திலிருந்து கிரதுவும், வலது நாசித்துவாரத்திலிருந்து அரணியும், இடது துவாரத்திலிருந்து அங்கிரசரும், வலது பக்கத்திலிருந்து பிருகுவும், இடது பக்கத்திலிருந்து தக்ஷனும், நிழலிலிருந்து கர்தமரும், உந்தியிலிருந்து பஞ்சசிக்ஷõவும், மார்பிலிருந்து வதுவும், கழுத்திலிருந்து நாரதரும், புஜங்களிலிருந்து மரீசியும், திரும்ப கழுத்திலிருந்து அபந்தரதமனும், நாவிலிருந்து வசிஷ்டரும், கீழுதட்டிலிருந்து பிரசேதரும், இடது அக்குளிலிருந்து ஹம்சரும், வலது அக்குளிலிருந்து யதியும் தோன்றினர். இவர்களை எல்லாம் உற்பத்தியைப் பெருக்குமாறு பிரமன் கூற, நாரதர் மறுக்க அவரைத் தீய, துராசை உள்ள கந்தர்வனாக பிரம்மத்தைப் பற்றி ஞான மற்றவனாகவும், ஒரு வேலைக்காரிக்கு மகனாகவும் பிறக்குமாறு சபித்தார். பதிலுக்கு நாரதரும் பிரமனுக்கு மரியாதையும், பூஜையும் இல்லாதவாறு சபித்தார். மற்றவர்கள் படைப்பில் இறங்கினர். மரீசிக்குக் காசியபரும், அத்திரிக்குச் சந்திரனும், பிரதேசருக்குக் கவுதமரும், புலஸ்தியருக்கு அகத்தியரும் பிறந்தனர்.
 மனுவும் சதரூபையும்
பிரமன் சுவயம்புவ மனுவையும், அவன் மனைவி சதரூபையையும் தோற்றுவித்தான். அவர்களுக்குப் பிரியவிரதன், உத்தானபாதன் என்ற இரண்டு புத்திரர்களுடன் ஆகுதி, தேவஹுதி, பிரசுதி என்ற மூன்று புத்திரிகளும் பிறந்தனர். அந்த மூன்று புத்திரிகளும் முறையே ருசிமுனிவர், கார்தம முனிவர், தக்ஷன் என்ற மூவரையும் மணந்தனர். தக்ஷன், பிரசுதி தம்பதியரின் அறுபது புத்திரிகளில் இருபத்தேழு பேர் சந்திரனையும், எண்மர் தர்மராஜனையும், பதினோறு பேர் பதினோறு ருத்திரர்களையும், மற்றுமொரு பதின்மூன்று பேர் காசியப முனிவரையும், மீதி ஒருத்தி சிவபெருமானையும் மணந்தனர். தர்மனின் முதல் மனைவி மிருதி நரன், நாராயணன் என்ற இருவரைப் பெற்றெடுத்தாள். மற்ற மனைவிகள் சந்தோஷம் (திருப்தி) தைரியம் (அமைதி) ஹர்ஷ (மகிழ்ச்சி) போன்றவர்களை பெற்றெடுத்தனர்.
ருத்திரர்களின் புத்திரர்கள் சிவகணங்கள் ஆயினர். சதி சிவனை மணந்தாள். பின்னர், அவள் தக்ஷயஜ்ஞத்தின் போது அக்னிப் பிரவேசம் செய்து உயிரை விட்டு, அடுத்த பிறவியில் இமவானின் மகளாகப் பிறந்து பார்வதி என்ற பெயரில் சிவபெருமானை மணந்தாள். காசியப முனிவர் மனைவியரில் அதிதி தேவர்களையும், திதி ராக்ஷசர்களையும், கத்ரு பாம்புகளையும், வினதா பறவைகளையும், சுரபி பசுக்கள், எருமைகள் ஆகியவற்றையும் சரம நாளுகால் பிராணிகளையும், தனு தானவர்களையும் மற்ற மனைவியர் மற்றவர்களையும் தோற்றுவித்தனர். சந்திரன் தன் மனைவியரில் ரோகிணியை மட்டும் அதிகமாக நேசிக்க, மற்றவர்கள் தந்தை தக்ஷனிடம் முறையிட, அவன் சந்திரனைத் தேய்ந்து போகுமாறு சபிக்க, சிவனருளால் கடைசி கலை திரும்பவும் வளரும் அருள் பெற்ற கதையைப் பல புராணங்களில் காணலாம். அதன் பிறகு தன் மனைவியர் அனைவரையும் சமமாக நடத்தினான்.
பிருகு முனிவரின் மகன் சியவனர், கிரதுவின் மகன்கள் குள்ளமான பாலகில்யர்கள் என்ற முனிவர்கள், ஆங்கீரச முனிவருக்கு பிருஹஸ்பதி, உததிதீயன், சம்பரன் என்போர், வசிஷ்டரின் மகன் பராசரின் தந்தையாகிய சகிரி, பராசரின் மகன் வியாசர், அவர் மகன் சுகதேவன், புலஸ்தியரின் புத்திரர்கள் விஸ்வச்ரவன், குபேரன், அவருடைய மற்ற புத்திரர்கள் இராவணன், கும்பகர்ணன், விபீஷனன் ஆகியோர். புலஹருக்கு வடச்யன், ருசிக்குச் சாண்டில்யன், கவுதமனுக்கு சவர்ணி, பிருஹஸ்பதிக்குப் பரத்வாஜன். இவர்கள் சந்ததியர் அனைவரும் அந்தணர்களே. அவர்கள் காசியப, பரத்வாஜ, வத்ச்ய, சவர்ணி, சாண்டில்ய கோத்திரத்தில் பிறந்தவர்கள். மற்ற அந்தணர்கள் பிரமன் முகத்திலிருந்து தோன்றினர். சூரியன், சந்திரன், மனுவின் புத்திரர்கள் க்ஷத்திரியர்கள், மற்ற க்ஷத்திரியர்கள்; பிரம்மாவின் புஜத்திலிருந்து தோன்றினர். வைசியர்கள் பிரம்மாவின் முழங்காலிலிருந்தும், மற்றவர்கள் பாதத்திலிருந்தும் பிறந்தார்கள் என்பது புராணக்கூற்று. மேலும் பல இனங்கள், வம்சங்கள் பற்றியும் இப்புராணம் கூறுகிறது.
 உறவு முறைகள்
பிரமன் கூறியவாறு உறவுகள் சொல்லப்படுகின்றன என்கிறது இப்புராணம். அந்த உறவுப் பெயர்கள் அனைத்தும் வடமொழிச் சொற்களாகவே உள்ளன. தாய், தந்தை, பாட்டன், பாட்டி, அத்தை, சித்தி, பெரியம்மா மகன், மகள், கணவன், மனைவி, மாமனார், மாமியார், பேரன், பேத்தி, மருமகன், மருமகள் போன்றன. ஒருவன், உயிர் அளித்தவன், அன்னமளித்தவன், அச்சம் தருபவன், ஆசிரியர் என தொழிலுக்கேற்ப பெயர் பெறுகிறான். பலர் அன்னையின் தாயாராக (பாட்டி) கருதப்படுகின்றனர். பெற்ற தாய், மாற்றாந்தாய், தந்தையின் தாயார், (பாட்டி) தாயின்தாய், அத்தை, சித்தி() பெரியம்மா, எசமான் மனைவி, காப்பார் மனைவி, மற்றும் தாயார் என்று அழைக்கப்படும் பெண்மணிகள் அனைவரும் தாயே. அதாவது தாய்க்குச் சமமாவர். மேலும் நண்பர்கள், பிரியமானவர்கள் என்று பல உறவினர்களையும், நட்பினர்களையும் பொன்னே போல் போற்ற வேண்டும்.
உபவர்ஹனன்
கந்தமாதன பர்வதத்தின் மீது, புத்திரப்பேறு இல்லாத கந்தர்வ தம்பதியினர் இருந்தனர். அவர்களுக்குச் சிவனருளால் நாரதர் மகனாக அவதரித்தார். வசிஷ்டர் அவனுக்கு உபவர்ஹனன் என்று பெயரிட்டார். உப (அதிகப்படியான) வர்ஹரன் (பிரார்த்திகை). கந்தர்வ மன்னன் தன் ஐம்பது புத்திரிகளையும், உபவர்ஹரனுக்கு மணம் செய்து வைத்தார். ஒரு சமயம் உபவர்ஹனன் பிரம்மாவைத் தரிசிக்க சென்று சமயம் அங்கிருந்து ரம்பையின் மீது காதல் கொண்டு மணந்தான். இதனால் கோபம் கொண்ட பிரம்மா, நாரதன் உடனே மரிக்குமாறு சபித்தார். உபவர்ஹனனின் முக்கிய மனைவியான மாலவதி, இதனால் மிகவும் கோபம் கொண்டு பிரம்மா, சிவன், யமன் மூவரையும் சபிப்பதாக அச்சுறுத்தினாள். அவர்கள் விஷ்ணுவிடம் முறையிட அவர் ஓர் அந்தண இளைஞன் வடிவில் மாலவதி முன் தோன்றினார். அவர் தேவர்களிடம் உபவர்ஹனுக்கு உயிரளிக்க வேண்டும் என்றார். பிரம்மா நாரதன் உடலின் மீது நீர் தெளித்தார். அவன் புத்துயிர் பெற்றான். சூரியன் கண்பார்வை கொடுத்தார். வாயு பகவான் மூச்சளித்தார். இறுதியில் கிருஷ்ண பகவான் அவன் இதயத்தில் பிரவேசிக்க அவன் உயிர்பெற்றெழுந்தான்.
காலனுக்கு மனைவி மிருத்யுகன்யை அவர்களுடைய புத்திரி ஜரா (முதுமை) பொதுவாக விதி முடிந்தவர்கள் உயிரை யமன் பறித்துச் செல்வான். எனவே ஒருவனுக்கு நோய் உண்டாகிறது. மாலவதி அந்தண இளைஞனிடம் நோய்கள், நோய்க்காரணங்கள் பற்றிக்கூறுமாறு வினவ அந்த இளைஞன் எல்லா நோய்களுக்கும் காரணம் காய்ச்சல். அது அஜீர்ணத்தால் ஏற்படுகிறது. காய்ச்சலுக்கு கபம், வாதம், பித்தம், சிலேட்டுமம் ஆகிய நான்கும் காரணம். நோய்கள் 64 வகைகளாகும். நோய்களின் காரணங்கள், நிவாரணங்கள் பற்றிக்கூறும் சாஸ்திரம் ஆயுர்வேதம். கிருஷ்ணன் சதுர்வேதங்களை

No comments:

Post a Comment