Friday, June 17, 2016

சுவாமி நித்யானந்தா


சுவாமி நித்யானந்தா… …. பட்டி தொட்டியெங்கும், அனைவராலும் உச்சரிக்கப் பட்ட ஒரு பெயர். தமிழ்நாட்டில் அனைத்துப் பிரச்சினைகளையும் பின்னுக்குத் தள்ளி ஏறக்குறைய ஒரு மாத காலத்துக்கும் மேலாக தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பெயர்.
இந்தியாவில் எப்போதுமே, ஆன்மீகத்துக்கு நல்ல மதிப்பு இருந்தே வந்திருக்கிறது. 99 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருந்ததன் மூலம், ஓஷோ, இந்தியாவின் ஆன்மீக ட்ரஸ்ட்க்கு  அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். ஓஷோவின் கணக்கிலடங்காத சொத்துக்கள், இது எவ்வளவு பணம் புழங்கும் ட்ரஸ்ட் என்பதை உலகுக்கு உணர்த்தியது.

அடுத்தவர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (கிருஷ்ணமூர்த்தி பவுன்டேஷனும் பணம் புரளும் ஒரு ட்ரஸ்ட்தான்).
இவர்கள் இருவரின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப வந்தவர்கள் மூவர். ஒருவர் ஜக்கி வாசுதேவ். அடுத்தவர்  ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் . அடுத்தவர் சுவாமி நித்யானந்தா. ஹந்து மதம், புத்த மதம், ஜெயின மதம், கிருஸ்துவம், சொளராஸ்ட்ரிசம், ஜூடாயிஸம், சாவோ டாய்,பஹியா, கன்ப்பூயிஸம், தாவோயிஸம், இஸ்லாம், சின்டோ போன்ற மதங்களை சார்ந்த பரமஹம்ஸரின் பக்தர்களும் சீடர்களும் பரமஹம்ஸ நித்யானந்தரை வாழும் அவதார புருஷராக வழிபடுகிறார்கள். 1978 ஆண்டு பிறந்த நித்யானந்தாவின் ண்மையான பெயர் ராஜசேகரன். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை மானசீக குருவாக கொண்டு வளர்ந்த ராஜசேகரன், 12 வயதிலேயே குண்டலினி சக்தியை எழுப்பும் ஆற்றல் பெற்றதாக அவரது வாழ்க்கை வரலாறு சொல்கிறது. இமயமலையில் உள்ள ஒரு பெரிய சுவாமி அவருக்கு பரமஹம்ச நித்யானந்தா என பெயரிட்டதாக வாழ்க்கை வரலாறு கூறுகிறது. இவரின் குடும்பம் ஒரு சாதாரண விவசாய குடும்பம்.இவரின் அப்பா ஒரு கூலி தொழிலாளி. பிறந்த பத்தாவது நாளில் அவருக்கு ஜாதகம் கணிக்க அழைக்கப்பட்ட ஜோதிடர், குழந்தையின் கிரகசாரங்களை பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராஜ சன்னியாசியாக திகழ்வார் என்று கூறினாராம்.

பன்னிரெண்டாம் வகுப்பு வரை இவர் அரசு பள்ளியிலையே படித்து உள்ளார்.அதன் பின் அருணை பொறியியல் கல்லூரியில் சேர்ந்து உள்ளார்.ஆரம்ப காலங்களில் இவருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவராகவே சுற்றி உள்ளார்.கல்லூரியில் சேர்ந்த முதல் இவரை கல்லூரியில் பார்ப்பதை விட ஆலயங்களில் மட்டுமே அதிகம் பார்க்க முடிந்ததாம் என்பது மேலதிக தகவல். ஈரோட்டில் காவிரி நதிக்கரையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்த அவர், அங்கிருந்து பெங்களூரு சென்று ஆசிரமம் நிறுவினார். சுவாமி நித்தியானந்தாவுக்கு கர்நாடகத்திலும், தமிழகத்திலும் ஆசிரமங்கள் உள்ளன. 33 நாடுகளில 1200 மையங்களுடன் இயங்கும் அவரது தியானபீடங்களில் ஏராளமானவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கல்லூரிகளில் பல பாடத் திட்டங்கள் இருப்பது போல நித்யானந்தா தியான பீடங்களிலும் பல தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.


சுவாமி நித்யானந்தா ஆனந்த விகடனில் தொடர் எழுதுவார். ஜக்கி வாசுதேவ்  குமுதத்தில் தொடர் எழுதுவார். ரவிசங்கர், இந்தியா டுடேவின் அட்டைப் படத்தில் வருவார். இது போக மின்னணு ஊடகங்களிலும் இடம் பிடிப்பதில் இவர்கள் மூவருக்கும் இடையே கடும போட்டி.
பிரம்மச்சரிய விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்களுக்கு போதித்து வரும் நித்யானந்தா ஒரு தமிழ் நடிகையுடன் ல்லாசமாக இருக்கும் காட்சிகள் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தான், நக்கீ பத்திரிக்கையில் 1993 94 ஆண்டுகளில் ஜக்கி வாசுதேவின் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியிடுகிறது. இந்த செய்தியை எழுதியவர் மரன் என்ற நிருபர்.

இதற்கு அடுத்து அதே ஆண்டுகளில் நக்கீயில் ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில் கஞ்சா சரளமாக புழங்குகிறது என்று ஒரு செய்தி வருகிறது. இதையும் மரன் என்ற நிருபரே எழுதுகிறார். 1994-95ம் ஆண்டுகளில் ஜக்கி வாசுதேவின், மாஹே மற்றும் ஏணம் பகுதிகளில் உள்ள ஆசிரமங்களில் பெண் விவகாரங்களில் கலாச்சார சீரழிவு என்று மீண்டும் செய்தி வருகிறது. இந்நிலையில், ஜக்கி வாசுதேவ், 1996-97ம் ஆண்டுகளில் ராஜை அழைக்கிறார். அப்போது கோவை சென்று ஜக்கியை சந்திக்கும் ராஜ், அந்த ஆசிரமத்திலேயே ஒரு மாதம் தங்குகிறார். இந்த கால கட்டத்தில், ஜக்கியிடம் மயங்கிய  ராஜ், ஜக்கியின் பரம சீடனாக உருவெடுக்கிறார். ஜக்கிக்காக தமிழ்நாட்டில் பல காரியங்களை செய்து கொடுக்கும் பரம பக்தனாக ராஜ் மாறுகிறார். இதையடுத்து, ஜக்கியின் ஆசிரமத்துக்காக சொத்தக்களை வாங்கிக் குவிப்பதிலும், இது தொடர்பாக அரசு அலுவலகங்களில் வேலைகளை சுலபமாக்குவதிலும், ராஜ் பெரும் பங்கு வகிக்கிறார்.
இந்த மூன்று சாமிக்குள் ஏற்கனவே இருந்த தொழில் போட்டியை தன்னுடைய போட்டியாக  ராஜ் கருதத் தொடங்கினார். இதையொட்டியே, ராஜுக்கு, நித்யானந்தாவின் சீடர், லெனின் என்கிற தர்மானந்தாவின் பழக்கம் ஏற்படுகிறது. இந்த தர்மானந்தா, நித்யானந்தா பற்றி காமராஜிடம் கூறுகிறார். இருவரும் சேர்ந்து ஒரு பெரிய சதித் திட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

நித்யானந்தாவை சிக்கலில் மாட்டுவது போன்ற ஒரு வீடியோ படத்தை தயாரிக்கத் திட்டமிடுகின்றனர். லெனினுக்கு தொழில்நுட்பம் பற்றிய விபரங்கள் ஏதும் தெரியாது என்பதால், இதற்கான வீடியோ கேமரா மற்றும் இதர உபகரணங்களையும் ராஜே வாங்கிக் கொடுக்கிறார். திட்டமிட்டபடி வீடியோ உபகரணம் உரிய இடத்தில் பொருத்தப் படுகிறது.
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல ராஜு திட்டமிட்டபடி நடிகை சாதாரனமாக நெருக்கமாக இருக்கும் காட்சி பதிவாகிறது. இதைப் பார்த்த, ராஜுக்கும், லெனினுக்கும் சாமியாரை மிரட்டி பணம் பறிக்கலாம் என்ற எண்ணம் வருகிறது.
இதையடுத்து, லெனினையே, சுவாமி நித்யானந்தாவோடு பேரம் பேச அனுப்புகிறார் காமராஜ். இவர்களின் பேரம் பல கோடி ரூபாய்களைக் கேட்கிறார்கள்.

நித்யானந்தாவோடு பேரம் தொடங்கியதும், சுவாமி நித்யானந்தா இந்த விவகாரத்தைப் பற்றி, சேலத்தில் உள்ள ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியிடம் ஆலோசனை கேட்கிறார். அந்த அதிகாரி, இது போல பணம் கொடுத்தால், இந்த ப்ளாக் மெயில் தொடரும் என்பதால், பணம் கொடுக்க மாட்டேன் என்று மறுக்க சொல்கிறார். அதன் படியே சுவாமி நித்யானந்தா  பணம் கொடுக்க மறுக்க, இந்த வீடியோவை வெளியிடுவது என்று லெனினும் ராஜும் முடிவெடுக்கின்றனர்.

அச்சு ஊடகங்களில் வந்தால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று காட்சி ஊடகங்களிலும் வர வேண்டும் என்று முடிவெடுக்கப் பட, சன் டிவியுடன் பேரம் பேசி, இந்த வீடியோவுக்கான பிரத்யேக ஒளிபரப்பு உரிமைகளைத் தர, ஒரு தொகையை பெற்றுக் கொள்கிறார்.
இது போல வீடியோ ஒளிபரப்பப் படுகிறது என்ற தகவல் அறிந்த ஒரு மூத்த பத்திரிக்கையாளர் சன் டிவியின் செய்தி ஆசிரியரை தொடர்பு கொண்டு வீடியோ நகல் ஒன்று வேண்டும் என்று கேட்க, மொத்த கன்ட்ரோலும் நக்கீயிடம் உள்ளது என்றும் எந்த நகலையும் யாருக்கும் தர உரிமை இல்லை என்று பதில் அளித்தது குறிப்பிடத் தக்கது.


இந்த வீடியோவை வெளியிட்டதால் நக்கீ உட்பட அனைவருக்கும் லாபம் தான். இது தொடர்பான செய்தி முதலில் வெளி வரும் நேரத்தில் நக்கீயின் சர்குலேஷன் எவ்வளவு தெரியுமா ? வெறும் 6,000. இந்த நேரத்தில் வாரம் இருமுறை இதழாக இருக்கும் நக்கீ மீண்டும் வார இதழாக மாற்றலாமா என்ற ஆலோசனை நடக்கும் அளவுக்கு நிலைமை பரிதாபமாக இருந்தது.  சுவாமி நித்யானந்தா கதைக்குப் பிறகு, நக்கீயின் சர்குலேஷன் 1.5 லட்சத்தை தொட்டிருக்கிறது.


No comments:

Post a Comment