Friday, July 1, 2016

இறை சக்திமையம் சக்கரங்கள்


 ல்லாம் வல்ல இறைசக்தி இப்புவி எங்கும் வியாபித்து நன்மைகளை நல்கி வருகிறது. எனினும் 'கர்மா' வின் காரணமாகவும், மனிதன் செய்கின்ற தவறுகளினாலும், உணவுப் பழக்கவழக்கங்களாலும்'நோய்'  என்னும் துன்பத்திற்கு மனித சமுதாயம் ஆட்பட்டு இன்னல் அனுபவிக்கிறது. எனினும் வந்த நோயைப் போக்க இறைவன் பல மருத்துவ முறைகளையும், மருந்துகளையும் இப்புவியிலேயே அன்பளிப்பாக வழங்கி நிவாரணம் தேடும் முறைகளையும் வைத்திருக்கிறான்.
       இதில் Rei-Kie எனும் தெய்வீகசிகிச்சை முறையும் ஒன்று. இந்த முறையில் எந்த மருந்தும் கிடையாது, பக்க விளைவுகளும் கிடையாது. இச்சிகிச்சை முறையில் பிரபஞ்ச சக்தியை கை வழியாக பாய்ச்சி நோயைக் குணமாக்கலாம். இச்சிகிச்சையை பற்றி சொல்லும் போது, நம் உடலின் சக்தி மையங்களான “சக்ரா” என அழைக்கப்படும் சக்தி மையங்களைப்பற்றி இங்கு சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம். நம் உடலின் தலையாய ஏழு சக்கரங்களைப் பற்றிப் பார்ப்போம். பொதுவாக இந்த சக்கரங்களின் செயல்பாடு பாதிக்கப்படும் போது உடல் நோய் வாய்ப்படும்.
1. மூலாதாரம் Root :
         ந்த சக்கரம் (சக்தி மையம்) ஆண் மற்றும் பெண்குறிக்கும், குதத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. நம் உடலும், உயிரும் பூமியில் நிலைத்து நிற்க இந்த சக்கரத்தின் பங்கு மிக முக்கியமானது இங்கிருந்துதான் நம் உடலுக்கு சக்தி கிடைக்கிறது. இது நிலம் எனும் பஞ்சபூதத்தத்துவத்தை உடையது நிறம்-சிவப்பு சூரியக்கிரகத்தின்  கதிர்களை ஆகர்சித்து இயங்குகிறது . இந்த இயக்கத்தின் செயல்பாடு பாதித்தால் எலும்பு தேய்மானம், மூலம், ஆண்மை எழுச்சி குறைபாடு, ஆண்களுக்கு ஆண் தன்மை குறைதல், உடல் வெப்பம் குறைந்து போதல், சோம்பல், எதிலும் ழுழுமையாக ஈடுபாட முடியாமை, மற்றவரிடம் தேவையில்லாமல் எரிந்து விழுதல், Short Tember என்று சொல்வார்கள் சின்ன விசயத்திற்கு கூட கோபப்படுதல் போன்றவை நிகழும் உடல் எடையும் அதிகரித்தல் அல்லது குறைந்து போதல் நிகழும். எனவே இந்த சக்தி மையத்தினை சரியாக இயங்கவைப்பது மிக மிக முக்கியம்.
2. சுவாதிஸ்டாணம் Sacrum :
       து 'நீர்' எனும் பஞ்ச பூதத்துடன் தொடர்பு கொண்டது நிறம் ஆரஞ்சு வண்ணமுடையது. இதன் செயல்பாடுகளில் குறைபாடு இருந்தால் செக்ஸ் சம்பந்தப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். இரத்த ஒட்ட குறைபாடுகள் நிகழும், ஆஸ்த்துமா போன்ற நோய்களும், பெண்களுக்கு யூட்ரஸ் குறைபாடுகளும், மாத விடாய்க் கோளாறுகளும் தோன்றும். இந்த சக்கரத்தின் செயல்பாடு அதிகரித்தால் உடல் அதிக எடை கூடுதலும், கட்டுக்கடங்காத செக்ஸ் எண்ணங்களும் உருவாகும். இந்த சக்கரம்தான் நம் உடல், முக அழகுக்குக் காரணம். இந்த சக்கரம் சந்திரன், சுக்கிரன் போன்ற கிரகங்களின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. எனவே நம்குடும்பம், மகிழ்ச்சி, செக்ஸில் திருப்தி போன்றவற்றை இந்த சக்தி மையம் நிர்ணயிக்கிறது. எனவே இதன் செயல்பாட்டை சீராக இயங்க வைப்பது மிக முக்கியம்.
3. மணிப்பூரகம் Solarplexus :
       ந்த சக்திமையம் 'நெருப்பு' எனும் பஞ்ச பூதத்துடன் தொடர்பு கொண்டது. நிறம் மஞ்சள், நமது உடலின் தொழிற்சாலை யான வயிற்றை சரிவர இயங்கவைப்பது. இந்த சக்கரம்தான். நாம் சாப்பிடும் உணவின் சத்துக்களை அந்தந்த பாகங்களுக்கு அனுப்பி உடலை ஆரோக்கியமாக செயல்பட வைப்பதில் இந்த சக்ரா மிக முக்கியத்துவம் வாய்ந்தது. நம் அறிவுத்திறன் பளிச்சிடவும், நமக்கு செயல்திறன் கூடி, பேர் புகழ் கிடைக்கவும் இது நன்றாக செயல்படுவது மிகமுக்கியம். இந்த சக்கரத்தின் குறைபாட்டால் ஜீரணக் கோளாறு உண்டாகும், ஜீரணக்கோளாறு உருவானால் பலநோய்கள் நம்மை தொடர்பார்க்கும். டயாபிடிஸ் எனப்படும் சர்க்கரை நோய் இப்போது பரவலாகக்காணப்படுகிறது. இந்நோய்க்கும் இந்த சக்கரம்தான் பொறுப்பேறகிறது. இப்புவியல் வாழ பணம் எல்லோருக்கும் தேவைப்படுகிறது. மணிப்பூரகமும், சுவாதிஸ்டாணமும் சேர்ந்து நன்றாக இயங்கினால்தான் வாழ்க்கை வசதி பெருகி சிறப்பாக வாழ்வு அமையும்.
4. அனாஹதம்  Heart :
         ஞ்ச பூதங்களில் 'காற்று' எனும் தத்துவத்துடன் தொடர்பு கொண்டது இது இரதயச்சக்கரம் என அழைக்கப்பட்டுகிறது. நெஞ்சுப்பகுதியின் நடுவில் அமைந்து இருக்கிறது. இதன் இயக்கம் பாதிக்கப்பட்டால் பொதுவான ஆரோக்கியம் கெடும். தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டடில் இயங்குவதால் உடல் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்து இருப்பது இந்த சக்கரம்தான். இதன் செயல்பாடு குறைந்தால் மக்கள் தொடர்பு பாதிக்கப்படும். பிறருடன் நட்பாக பழக முடியாது. அன்பு செலுத்தமுடியாது. தோல் நோய்கள் தென்படும். இதயம் சார்ந்த நோய்கள் குடிகொள்ளும் நம்பு பலகீன் இருக்கும் குழந்தைகளுக்கு படிப்பு பாதிக்கப்படும். இந்த சக்கரம் சரியாக இயங்கினால்தான் படிப்பில் குழந்தைகள் ஆர்வம் காட்டுவார்கள். நம் உடலில் வெள்ளையணுக்களை அதிகரிக்க செய்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. மகிழ்ச்சி, திருப்தி நிலை போன்றவற்றை தன்னகத்தே கொண்டது இச்சக்கரம்.
5. விசுத்தி Throat :
         ஞ்ச பூதத்தத்துவத்தில் 'ஆகயம்' எனும் பூதத்துடன் தொடர்பு உள்ளது இச்சக்கரம். பஞ்ச பூதத்தில் ஆகாயமே உயர்ந்ததும், பெரியதும் ஆகும். இச்சக்கரத்தின் நிறம் நீலம் குரு, சனி எனும் சூரியக்குடும்பத்தின் பெரியக்கோள்களால் இயக்கப்படும் இச்சக்கரம் தொண்டைக் குழியில் இடம் பெற்றுள்ளது. இது சரியாக இயங்க வில்லை என்றால் நாம் நினைப்பதை பிறரிடம் எடுத்து செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும். பசியின்மை உருவாகும். தைராய்டு பிரச்சனை அநேகப் பெண்களுக்கு உருவாகிறது. அது இச்சக்கரம்தான் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. குழந்தையில்லா பெண்கள் விசுத்தி மற்றும் சுவாதிஸ்டானம் ஆகிய சக்கரங்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் இறைவன் அருளால் விரைவில் குழந்தை பாக்கியம் பெறுவார்கள் டென்சனைக் குறைத்து மன அமைதி நிலவச்செய்ய இச்சக்கரத்தை சமன் செய்யவேண்டும். பற்கள் மற்றும் காது சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு இந்த சக்கரத்திந்து சிகிச்சை அளிக்க குணமாகும்.
6. ஆக்ஞா Thirdeye :
       ந்த சக்கரத்தின் வண்ணம் இன்டிகோ நீலம் எனப்படும் கருநீலம் இது ஞானச்சக்கரம் எனப்படும். இறைவனோடு தொடர்பு கொண்ட இச்சக்கரம் மிக முக்கியமானது. சுரப்பிகளின் தலைவன் என அழைக்கப்படும் 'பிட்யூட்டரி' சுரப்பி இதன் கட்டுப்பாட்டடில் இயங்குகிறது. இந்தச்சக்கரம் செயலிழந்தால் இதன் கீழுள்ள ஐந்து சக்கரங்களும் அடுத்தடுத்து செயல்பட மறுக்கும். எனவே எந்த சக்கரததின் செயல்பாடு குறைவால் ஏற்பட்ட வியாதியாய் இருந்தாலும் இந்த சக்கரத்திற்கு முதலில் சிகிச்சை செய்த பின்புதான், பாதிக்கப்பட்ட சக்கரத்திற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் அப்போதுதான் நோய் நீங்கும் இந்த சக்கரத்தின் குறைபாட்டால் சிறுமூளை பாதிப்பு உருவாகும் ; கண்பார்வைக் கோளாறுகள் உண்டாகும். மனம் சம்பந்தப்பட்ட கோளாறுகளும், மனக்கலக்கமும் உருவாகும். எனவே இந்த சக்கரத்தை சிகிச்சை மூலம் சீர் செய்ய வேண்டும்.
7. சஹஸ்ரஸாரம்  Crown :  
          து சக்கரங்களின் தலையாய சக்கரம் உச்சந்தலையில் உள்ளது. இதன் நிறம் 'வயலட்' இச்சக்கரம் வானத்தை நோக்கிய நிலையில் இருப்பதால் இறை சக்தியுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது. எனவே பிரபஞ்ச சக்தி இச்சக்கரத்தின் வழியாக உடல் ழுழுவதும் பரவுகிறது. எனவே இச்சக்கரத்திற்கு நேரடியாக சிகிச்சை கொடுக்கக் கூடாது. எனவே இச்சக்கரம் இருக்கும் உச்சந்தலையில் எக்காரணம் கொண்டும், அவசியமில்லாமல் கையை வைக்கக்கூடாது. இப்படி கையை வைப்பதால் இச்சக்கரத்தின் செயல் தடைபடும். அது நமக்கு நாமே செய்யும் பெரிய கேடு. தியானம் செய்யும் வேலைகளில் இச்சக்கரத்தின் செயல்பாடு அதிகரிக்கும் இச்சக்கரத்தின் குறைபாட்டால் மன அமைதி குறைதல், பெரு மூளையின் செயல்பாடு குறைதல், மூளைப்பாதிப்புகள், வலது கண் கோளாறு, காக்காய் வலிப்பு, ஆண்மீகத்தில் நாட்டமில்லாமல் போகுதல் போன்ற குறைபாடுகள் ஏற்படும்.
அப்பப்பா பார்த்தீர்களா ? நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் எப்படி நம் உடலையும், மனதையும், வாழ்க்கையையும் பாதிக்கின்றன என்று. இந்த சக்கரங்களை பல்வேறு சூழ் நிலையால் பாதிக்கப்பட்டு அது சார்ந்த பாகங்கள் நோய் வாய்ப்படும். அந்த நோயை நீக்க நாம் அந்த சக்கரத்திற்கு Rei-Kie சிகிச்சை அளித்து அதை சீராக இயங்க செய்யலாம். இறையருள் பெற்ற Rei-Kie Symbols மூலம் அந்த சக்கரத்தின் செயல்பாட்டை அதிகரித்து பாதிக்கப்பட்ட உறுப்பினை ஆரோக்கியப்படுத்தாலம். இது ழுழுக்க பிரபஞ்ச சக்தியைக் கொண்டு சிகிச்சை செய்வதால் இச்சிகிச்சை நன்மையைத் தவிர தீமை எதுவும் செய்யாது. இச்சிகிச்சையின் தனித்துவம் என்ன வென்றால், உடலையும் ஆரோக்கியப்படுத்தி, மனதையும் வளப்படுத்தும், ஆன்மத் தெளிவையும் ஏற்படுத்தும். உடல் நோய்களுக்கு மட்டுமல்லாமல் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் இச்சிகிச்சை மிகப்பெரிய வரப்பிரசாதம். மனப் பிரமை, பயம், எதிர்மறை எண்ணங்கள் போன்றவற்றை போக்கி நல் எண்ணங்களை மனதில் மலரவைக்கும்.
தொலைதூர சிகிச்சை :
        ந்த சிகிச்சையின் பெரிய தனித்துவம் என்னவென்றால், தொலை தூரசிகிச்சை (Distance Healing) நோயாளி உலகத்தின் எந்த மூலையில் இருந்நதாலும் சரி,  இங்கு இருந்து கொண்டே அந்த நோயாளிக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம். நோயாளி நாம் சிகிச்சை அளிக்கும் நேரம் ஒய்வு நிலையில் இருந்தால் போதும் இங்கிருந்தே சிகிச்சை அளித்து பூரண சுகம் பெறலாம். பிரபஞ்ச சக்தியை பூரணமாகப் பெற்று இறையருளால் நோய் நீங்கி இன்பமாக வாழ்வோமாக !

No comments:

Post a Comment